பேரன்புடையீர், வணக்கம்.

 

தமிழுக்கும் தமிழருக்கும் மலேசியாவில் ஒரு மணிமண்டபமாக அமையவுள்ள ‘தமிழ்க் கோட்டம்’ எழுவதற்குத் தாங்கள் மனமுவந்து உதவ வேண்டுகிறோம். தங்களின் உதவியானது காலந்தோறும் நன்றியோடு நினைவுக் கூரப்படும்.

 

தமிழ் உள்ளமும் உணர்வும் கொண்ட தாங்கள், இந்தத் தூய்மைத் தமிழ்ப்பணிக்குக் கண்டிப்பாக உதவுவீர்கள் எனப் பெரிதும் நம்புகிறோம். நாம் வாழும் காலத்தில் தமிழுக்குச் செய்யும் ஓர் அரும்பணியாகவும் நிலையான திருப்பணியாகவும் நினைத்து இதனைத் தாங்கள் செய்ய வேண்டுமென மிகவும் எதிர்பார்க்கிறோம்.

 

விவரத்திற்கு : tamilkottam.blogspot.com

தொடர்பிற்கு : tamilkottam@gmail.com.

“காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மானப் பெரிது”