தலவாக்கலையில் மே நாள் – மலையக மக்கள் முன்னணித் தீர்மானம்
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மே நாளைத்
தலவாக்கலையில் நடாத்துவதற்கு
மலையக
மக்கள் முன்னணித் தீர்மானம்!
தொழிலாளர் நாளை முன்னிட்டுக் கொண்டாடப்படும் மே நாள் நிகழ்வினை இம்முறை தலவாக்கலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் கொண்டாடுவதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காகச் சிறப்புக் கூட்டம் (பங்குனி 27, ஏப்.09) தலவாக்கலையில் நடைபெற்றது. இதில் மலையக மக்கள் முண்ணணியின் தலைவரும் கல்வி அமைச்சருமான வே. இராதாகிருட்டிணன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமான ஏ. இலாரன்சு, நிதிச்செயலாளர் யு. அரவிந்தகுமார் முதலான கட்சியின் உயர் பொறுப்பாளர்கள், அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி அமைச்சருமான வே. இராதாகிருட்டிணன். எமது கட்சி கூட்டத்தின் போது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏனைய தலைவர்களுடன் பேச்சு நடாத்தித் தலவாக்கலையில் கொண்டாட ஒரு மனமாகத் திர்மானிக்கபட்டது. இதன்படி ஏனைய தலைவர்களுடன் பேசிச் சரியான தீர்மானம் எடுக்கபட்டு மே நாள் தலைவாகலையில் கொண்டாடப்படும் என்று கூறினார்.
Leave a Reply