தலை முடியில் குப்பாயம்(hair coat) உருவாக்கிய சீனப் பெண்
பீகிங் : சீனாவின் சாங்கிங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் சியாங்கு ரென்சியன்(Xiang Renxian) என்னும் ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் பணியில் இருக்கும் பொழுதே தன் 34 ஆம் அகவயைில், தலைவாரும் பொழுது சீப்பில் சிக்கும் முடிகளைத் தனித்தனி இழைகளாப்பிரித்துச் சேமித்து வைத்தார்.
தான் சேமித்து வைத்த முடிகளைக்கொண்டு 110,000 இழைகளை உருவாக்கியுள்ளார். 2003 ஆம் ஆண்டு முடியிழைகளைக் கொண்டு கணவருக்குக் குப்பாயமும் தொப்பியும் உருவாக்கத் தொடங்கினார். 11 ஆண்டுகள் கழித்து இப்பொழுது இவற்றை உருவாக்கி முடித்துள்ளார். ஒவ்வோர் இழையும ஏறத்தாழ 70 சிறுகோல்(செ.மீ.) நீளம் உடையது.
இவர் உருவாக்கியுள்ள குப்பாயம் 382 சிறுகல்(கிராம்) எடையும், தொப்பி, 119சிறுகல்(கிராம்) எடையும் உள்ளன.
தன் நீளமுடியைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே இம் முயற்சிக்கு வித்திட்டதாகவும் பொறுமையும் விடாமுயற்சியும் இருந்ததாலேயே இதனை முடிக்க முடிந்ததாகவும் அருவினைஞர் சியாங்கு ரென்சியன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply