தேவதானப்பட்டியில் மழையால் நெல் சேதம்
தேவதானப்பட்டிப் பகுதியில் திடீர் மழையால்
பலஇலட்சம் உரூபாய் மதிப்புள்ள
அறுவடை செய்த நெல் சேதம்
தேவதானப்பட்டிப் பகுதியில் திடீர் மழையால் பலஇலட்சம் உரூபாய் மதிப்புள்ள நெல்சேதமாகின. தேவதானப்பட்டியிலும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான கெங்குவார்பட்டி, மலைச்சாலை, கெ.கல்லுப்பட்டி, சில்வார்பட்டி முதலான ஊர்களிலும் முதல்போக நெல் பயிரிட்டு அதனை அறுவடை செய்து வந்தனர். 75 அயிரைக்கல்(கிலோ) கொண்ட நெல் மூடை தற்பொழுது 900 முதல் 1000உரூபாய் வரை விற்பனை ஆனது. கடந்த சில வாரங்களாக அறுவடை செய்த நெல் அதிகமாக வந்ததால் நெல் மூட்டையின் விலை உரூ800 வரை விற்பனை ஆனது. இதனால் நெல்அறுவடை செய்த உழவர்கள் தங்கள் நெல் மணிகளைக் கோயில்கள், களத்துமேடு, சாலைகளில் போட்டு வைத்தனர். விலை சீரான பிறகு விற்பனை செய்து கொள்ளலாம் எனப் பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில் தேவதானப்பட்டிப் பகுதியில் திடீர் கோடை மழையால் அறுவடை செய்த நெல் தண்ணீரில் மூழ்கியும், தண்ணீரில் ஊறியும் வீணானது. இதனால் ஈரமான நெல் என்பதால் தற்பொழுது விலை குறைவாக கேட்கிறார்கள் வணிகர்கள். எனவே அரசு விலை வரையறுத்து நெல் கொள்முதல் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் உழவர்கள்.
Leave a Reply