நாவி சந்திப்பிழை திருத்தி
வணக்கம்.
நாவி சந்திப்பிழை திருத்தியைத் தொடர்ந்து புதிதாக இத்தனை ஆண்டுகள் உருவாகிவந்த எழுத்துப்பிழை திருத்தியை இணையத்தில் விலையில்லாமல் வெளியிட்டுள்ளேன். இணையத்தில் வெளிவரும் முதல் சொற்பிழை திருத்தி. ஊடகத்துறையில் இருக்கும் உங்களுக்குப் பயன்படலாம் என்று அறியத் தருகிறேன்.
காணல் நீர் தேசம்
உலக தண்ணீர் தினம் என்று UNESCO ஆல் அறிவிக்கப்பட்ட MARCH 22 ம் தினத்தை நாம் அதற்குண்டான நாளாக நினைவில் வைத்து அதன் சிறப்பை உணர்த்தும் வகையில் தண்ணீரை பயன்படுத்துகிறோமா என்றால், அது கேள்விகுறியாக உள்ளது. எதிர்காலத்தில் நம் சந்ததியினர்க்கு நாம் சேமிக்கும் மிகபெரிய சொத்தாக தண்ணீர் இருக்கபோகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை, ஆனால் எப்படி பாதுகாப்பது என்பதில் தெளிவின்றி இருக்கிறது நமது நாடு. நம்முன்னோர்களுக்கு எளிமையாக கிடைத்த இந்த குடிநீர் இன்று நமக்கு கிடைப்பதே கடினமாக இருக்கிறது. ஏனென்று பார்த்தால் நாம் தண்ணீரின் முக்கியத்துவத்தை இன்னும் சரியாக உணரவில்லை. 2050ல் குடிநீர் எட்டாகனியாகி விடப்போகிறது என்று ஹர்வர்ட் பல்கலைகழகம் 15 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்து கூறியது.
புவிப் பரப்பின் 71% பகுதி நீரால் சூழப்பட்டள்ளது. புவியிலுள்ள தண்ணீரில் பெரும்பகுதி சமுத்திரங்கள், ஏனைய பரந்த நீர்நிலைகளிலும் சுமார் 1.6% பகுதி நிலத்தடி நீர்கொள் படுகைகளிலும் காணப்படுகிறது. வளிமண்டல நீரின் 0.001% பகுதி வாயு வடிவிலும் காற்றில் மிதக்கும் திட மற்றும் திரவ துகள்களால் நிரப்பப்பட்டுள்ளது. நில மேலோட்ட நீரின் 97% பகுதி உவர் நீர் சமுத்திரங்களிலும் 2.4% பனி ஆறுகள் மற்றும் துருவ பனிக்கவிகைகளிலும் 00.6% பகுதி ஏனைய நிலமேலோட்ட நீர் நிலைகளான ஆறுகள் ஏரிகள் குளம் குட்டைகளிலும் காணப்படுகிறது. 2025ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் நீரை அடிப்படையாகக் கொண்ட பலவீனங்களுக்கு உட்படுத்தப் படுவர் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபஞ்சத்தில் நீரின் பங்கீடு, பெருமளவு விண்மீன்கள் உருவாதலின் துணைப் பொருளாக விளைந்திருக்கலாம். விண்மீன்களின் தோற்றத்தின் போது அவற்றின் வலிமையான வெறிநோக்கு வளிக்காற்று மற்றும் புழுதிப் புயலால் சூழப்பட்டிருந்து உருவாகியிருக்கலாம். இத்தகைய வெளியேற்றம் நாளடைவில் சூழ்ந்திருக்கும் வாயுக்களைத் தாக்குவதனால் உருவாகும் அதிர்வலைகள் வாயுக்களை அழுத்தி வெப்பமேறச் செய்கிறது, அவ்வமயம் தென்படுகிற நீரானது, இந்த வெப்பச் செறிவான வாயுக்களால் அதிவேகமாக உற்பத்தி செய்யப்பட்டதாகும்.
புதன் வளிமண்டலத்தில் 3.4% நீரும் புறவழி மண்டலத்தில் பெருமளவு நீரும்,
வெள்ளி வளிமண்டலத்தில் 0.002%,
செவ்வாய் வளிமண்டலத்தில் 0.03%,
வியாழன் வளிமண்டலத்தில் 0.0004%,
என்ஸெலேடஸ் வளிமண்டலத்தில் சனியின் துணைக்கோள் 91% நீரும் பெறுள்ளன, இது பற்றிய ஆய்வுகள் கண்டுபிடித்துள்ள நேரத்தில் நம்மிடையே இந்த பூமியில் உள்ள நீர் வளத்தை காக்க என்னசெய்தோம். யுனெஸ்கோவின் உலக நீர் மேம்பாட்டுத் திட்டம்(WWDR) 2003 அதன் உலக நீர் மதிப்பீட்டு திட்டத்தின்படி அடுத்த 20 ஆண்டுகளில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய நீரின் அளவு 30 சதவீதம் வரைக் குறையலாமென தெரிவிக்கிறது. தற்சமயம் உலக மக்களில் 40 சதவீதம் பேர் குறைந்தபட்ச சுகாதாரத்திற்குத் தேவையான நீரை போதுமான அளவு பெறாதவர்களாவர். 2000 ல் 2.2 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் நீரால் வரும் நோய்களால் (கிருமி) பாதித்த நீரை அருந்துவதன் மூலம் அல்லது வறட்சியால் மரணமடைந்துள்ளனர். 2004 ல் வாட்டரெய்ட் எனப்படும் இங்கிலாந்தின் தர்மஸ்தாபனம் எளிதில் தடுக்கக்கூடிய நீருடன் தொடர்புள்ள நோய்களால், ஒவ்வொரு 15 வினாடிகளிலும் ஒரு குழந்தை இறப்பதாகக் கூறியுள்ளது. இதன் காரணம், பொதுவாக கழிவு அகற்றி சுத்தநீரை நாம் பயன்படுத்துவது இல்லை என்பது உறுதியாகிறது.
சமுத்திரங்களின் மேலுள்ள நீராவியில் பெருமளவு கடலுக்கே திரும்பிச் செல்லுகிறதென்றாலும் நிலத்தின் மேற்பகுதிக்குக் காற்றினால் எடுத்துச் செல்லப்படும் நீராவியின் அளவு, நிலத்தினின்று கடலுக்குள் வழிந்தோடும் தள ஓட்டத்துக்கு வருடத்திற்கு தலா 36 Tt (டெட்ரா டன்கள்) நீரை எடுத்துக்கொள்கின்றன, நில மேற்பகுதியின் மேல் நீராவி குளிர்ந்து சுருங்குதலால் ஏற்படும் நீர்க்கோர்வை வருடத்துக்கு 107 Tt என்ற அளவில் பல வடிவங்களில் வெளிப்படுகிறது. பொதுவாக மழை, உறைபனி, ஆலங்கட்டி, மழை போன்றவைகளாலும் சில நேரங்களில் மூடு பனி மற்றும் பனித்துளிகளாக இது தோன்றலாம்.
மனித நாகரீகத்தில் நீரின் பங்கு முதன்மையானதாக இருந்தது. நாகரீகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் மெஸொப்படாமியா இரு முக்கிய நதிகளான டைக்ரிஸ் மற்றும் யூப்ரட்டீஸ் இடையே அமையப் பெற்றிருந்தது. எகிப்தியர்களின் பண்டைய சமூகங்கள் நைல் நதியை முழுமையாக நம்பியிருந்தன. பெருநகரங்களான ராட்டர்டேம், லண்டன், மாண்டரீல், பாரிஸ், நியுயார்க் நகரம், பியுனோஸ் அயரஸ், ஷாங்கய், டோக்கியோ, சிகாகோ, ஹொங்காங், போன்றவை தாங்கள் பெற்ற வெற்றியைத் தங்களது நீர்வழி அணுக இயலுந்தன்மைக்கும் அதனால் விளைந்த வியாபார விருத்திக்கும் உரித்தாக்குகின்றன. பாதுகாப்பான துறைமுகங்களையுடைய சிங்கப்பூர், அவதிபடும் வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், போன்ற நாடுகளில்சுத்தமான குடிநீர் மனித வள மேம்பாட்டுக்கு தேவைப்படும் முக்கிய காரணியாய் இருக்கிறது.
இந்த இயற்கைவளம் சில இடங்களில் கிடைப்பதற்கரியதாய் இருப்பதால் இதன் இருப்பு சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது. தற்பொழுது உலகம் முழுவதும் 1.28 பில்லியன் மக்கள் வாடிக்கையாக ஆரோக்கியமற்ற நீரை உட்கொள்கின்றனர். பாதுகாப்பான குடிநீரும் சுகாதாரமும் கிடைக்காத உலக மக்கள் தொகையை 2015 க்குள் பாதியாக்க வேண்டும் என்ற 2008 ஆம் ஆண்டைய G8 ஈவியன் உச்சிமாநாட்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழியை பல நாடுகள் ஏற்றுக்கொணடுள்ளன. இந்த கடினமான சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றாலும்கூட பின்னும் நிர்ணயிக்கப்பட்ட பாதி பில்லியன் மக்கள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காதவர்களாகவும் ஒரு பில்லியன் பேருக்கு மேலான மக்கள் போதுமான சுகாதார வசதியற்றவர்களாயும் இருக்கும் நிலையே உள்ளது.
மோசமான நீரின் தரம் மற்றும் சுகாதாரமின்மை பயங்கரமானது, மாசுபட்ட குடிநீரால் வருடத்திற்கு 5 மில்லியன் இறப்புகள் நேரிடுகின்றன. பாதுகாப்பான நீர், வருடத்திற்கு 1.4 மில்லியன் வயிற்றுப்போக்கால் ஏற்படும் குழந்தை மரணங்களைத் தடுக்க வல்லதென உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. இருப்பினும் நீரானது முடிவுறும் ஆதாரமல்ல. குளிர்ந்து சுருங்குதலால் ஏற்படும் நீர்க் கோர்வைகளின் மூலம் அது மறுசுழற்சிக்குட்பட்டு மனிதர்கள் உட்கொள்வதை விடப் பன்மடங்கு அதிகமான அருந்தத்தக்க நீராக மாற்றப்படுகிறது. எனவே, பூமியினடியில் காணப்படும் சிறிதளவு நீர் மட்டுமே புதுப்பிக்க முடியாத ஆதாரமாக இருக்கிறது.
நிலத்தடி நீர் கொள்படுகைகளிலுருந்து நமக்கென எடுக்கப்படும் குடிநீர் விநியோகத்தில் 1 சதவீதம் நிறைவு செய்யப்பட நீர் 1முதல் 10 வருடங்கள் ஆகிறது. பூமியில் நீரின் எதார்த்த அளவு அதிகமாய் தென்பட்டாலும் அதற்கு மாறாக அருந்ததக்க மற்றும் பாசன நீரின் விநியோகம் அரிதானதாகவே இருக்கிறது.
நீர் வளமற்ற நாடுகள் நீரை இறக்குமதி செய்வதற்கு பதிலாக தயாரிப்பு முழுமை பெற்ற பொருட்களை இறக்குமதி செய்கின்றன. இதனால் மனிதர்கள் உட்கொள்வதற்கு போதிய அளவு தண்ணீர் மிஞ்சுகிறது. ஏனெனில் பொருட்களின் உற்பத்திக்கு அப்பொருட்களின் எடையை விட 10 முதல் 100 மடங்கு அதிக எடையுள்ள நீர் தேவைப்படுகிறது.
வளரும் நாடுகளில் 90% கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் உள்ளுர் நதிகளுக்கும் ஓடைகளுக்கும் போய்க்கொண்டிருக்கிறது. உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ள 50 நாடுகள் மிதமான அல்லது மிகுதியான நீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றன. இவற்றில் 17 நாடுகள் நீர் சுழற்சியினால் வருடம்முழுவதும் தங்களுக்குக் கிடைக்கும் நீராதாரத்திற்கும் மேலாக செயற்கையாக நீரைப்பிரித்தெடுப்பனவாய் இருக்கின்றன. இத்தகைய இழுபறி நன்னீர் நிலைகளான நதிகளையும் ஏரிகளையும் பாதிப்பதோடல்லாமல் நிலத்தடி நீராதாரங்களையும் குறைக்கிறது.
இயற்கை நீர் பெருமளவு ஹைட்ரஜன்-1 மற்றும் ஆக்ஸிஜன் -16 எனும் ஐசோடோப்புகளைக் கொண்டிருந்தாலும் சிறிதளவு ஹைட்ரஜன்-2 ஐசோடோப்புகளையும் கொண்டிருக்ககூடும் ஆக்சைடுகள் அல்லது கன நீர் சிரிதளவேயிருந்தாலும் அது நீரின் இயல்பினை வெகுவாகப் பாதிக்கிறது. நதிகள் மற்றும் ஏரிகளின் நீர் கடல்நீரை விட டியுடீரியத்தை குறைவாகப் பெற்றிருக்கின்றன. எனவே, தரமான நீர் என்பது இனி சற்று கடினம். இந்த சூழ்நிலை உள்ளபோது, இதை மாற்றி அமைக்க வேண்டும்மென்றால் அது அரசாங்கம் நினைத்தால் மட்டுமே முடியும். ஒவ்வொரு வீட்டிற்க்கும் மழைநீர் தொட்டி அமைத்தால் தான் வீட்டு கட்ட அனுமதி வழங்குவது என்ற நடை முறையில் சற்று மாற்றம் செய்து, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஏரி அமைத்தால் தான் அங்கு வாழ தகுதியான இடம் என்று மாற்றுவதும் மற்றும் எத்தனையோ ஊர்களுக்கு ஏரிகளே இல்லாமல் இருக்கின்றன. ஏரிகள் மற்றும் குலங்கள் அமைத்தல், அதுமட்டுமல்லாமல் 100 கிலோமீட்டருக்கு ஒரு சிறிய அனை என்ற பண்டைய அரசர்கள் ஆண்ட நடைமுறையை உருவாக்கி தண்ணீர் சேமிக்கும் முறையை கொண்டு வந்தால் மழைகாலங்களில் தண்ணீர் சேமிக்க முடியும் நாம் அண்டை மாணிலங்கலிடம் கையேந்த தேவைஇருக்காது
நீரின் மீதான அரசியலும் பங்கீடும் நம் அண்டை மாணிலங்களில் நம்மிடையே கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது நிரந்தர சேமிப்பு முறையில் பல புதிய அணைகளை கட்ட திட்டம் வகுத்து நிறைவேற்றி வருகிறது. ஆனால், நம் அரசியல் தலைவர்கள் நீரை பெறுவதாக் சொல்லிக்கொண்டு ஊடகத்திற்க்குள் தன்னை அனுதினமும் முன்நிருத்திக்கொள்கிறார்கள்.
இதே போல, மத்தியில் ஆலுகின்ற அரசாங்களும் இதை சொல்லி வாக்கை சேகரித்து ஆட்சியமைத்து பிறகு முந்தைய ஆட்சியாளர்களை குறை கூறி இவர்கள் மக்கள் நலனில் அக்கரை உள்ளவர்கள் போல போலியான திட்டங்களை வகுத்து இவர்கள் தேவை பூர்தி செய்துகொள்வதுடன் இந்திய மக்கள் மீது ஒவ்வொரு 5 ஆண்டும் கடந்தவுடன் கடன் சுமை அதிகரித்தவாறு உள்ளது.
எனவே, எதற்க்கு அரசியல் எதற்க்கு சட்டம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இந்த இயற்கை வழங்களை பாதுகாக்க நாம் இனியாவது முயற்சிப்போம் தன்நிறைவு பெறுவோம்.
தே.சுதாகர், தி நியு இந்தியா அசூரன்ஸ் அட்வைசர்