அருண்சேத்துலி :  Arun Jaitley

நிதி நிலை அறிக்கை – 2016: விலை உயர்வு – குறைவுப் பட்டியல்

தலைமையமைச்சர் நரேந்திர மோதி தலைமையிலான நடுவண் பா.ச.க அரசின் 2016-2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையினை (Budjet) மாசி 17, 2047 / பிப்பிரவரி 29, 2016 அன்று நாடாளுமன்றத்தில் நடுவண் நிதியமைச்சர் அருண் செத்லி அளித்தார்.

இதனால் வரி போடுவதில் மேற்கொண்டுள்ள மாற்றத்தின் எதிரொலியாக விலை உயர்கிற குறைகிற பொருட்கள், சேவைகள் போன்றவற்றின் பட்டியலைப் பார்ப்போம்.

விலை உயர்வு பெறுபவற்றின் பட்டியல்:

– விளையாட்டுக்காகப் பயன்படுத்தும் (sport utility) ஊர்திகள்.

– சிறிய வகை மகிழுந்துகள் (cars), நிலநெய் (Diesel) மகிழுந்துகள், சொகுசு மகிழுந்துகள். (முறையே 1%, 2.5%, 4% அளவுக்கு இந்த மகிழுந்துகளின் வரி உயர்த்தப்படுவதால்).

– வெள்ளி அல்லாத நகைகள்.

– சுருட்டு நீங்கலாக வெண் சுருட்டு (cigarette) முதலான புகையிலைப் பொருட்கள்.

– விமானப் பயணச்சீட்டு.

– வணிகமயப்படுத்தப்பட்ட (Branded) உடைகள்.

– தங்க நகைகள்.

– வைரம்.

– விடுதி உணவுகள்.

– கைப்பேசிக் கட்டணம்.

– காப்பீட்டுத் திட்டங்கள்.

– திறன்பேசிகள் (Smart phones).

– திரைப்படக் கட்டணம்.

– தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர்.

 விலை குறைவு பெறுபவை பட்டியல்:

– குருதித் தூய்மைப்படுத்தும் (Dialysis) மருத்துவக் கருவிகள்.

– புடையெழுத்துத்தாள்கள் (Braille Papers).

– குருதித் தூய்மைப்படுத்தும் மருத்துவச் செலவு. (அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் தேசிய இலவசக் குருதித் தூய்மைப்படுத்தும் பணிமை நடைமுறைக்கு வருவதால்).

– இணையத் தருவி (modem).

நோயர் ஊர்தி (ambulance) சேவை.

– காட்சி அணுக்கப்பெட்டி (set-top box).

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - peyar_name_e.bhu.gnanaprakasan02