தலைப்பு-ஓவியப்போட்டி - oaviyapoatti

நிலந்தரு திருவின் பாண்டியன், பனம்பாரனார்,

உருவ ஓவியப்போட்டி

– பரிசு உரூபாய் பத்தாயிரம்

  புலவர் த.சுந்தரராசன் அறிவிப்பு

  தலைநகரத் தமிழ்ச்சங்கம் குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் தொல்காப்பியர் சிலை அமைக்க உள்ளது. வரும் சித்திரை முதல் வாரம் இதற்கான விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் தொல்காப்பியம் அரங்கேறிய அவையை – தமிழ்ச்சங்கத்தை – நடத்திய வேந்தர் நிலந்தரு திருவின் பாண்டியன் படமும், தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய புலவர் பனம்பாரனார் படமும் திறக்கப்பட வேண்டும் எனச் சிலையமைப்புக் குழு முடிவெடுத்துள்ளது. எனவே, தமிழன்பர்களும் ஓவியர்களும் வேந்தருக்கும் புலவருக்கும் உள்ள பெருமித உணர்வு வெளிப்படும் வகையில் எழில் மிகு ஓவியங்களை வரைந்து தருமாறு வேண்டப்படுகின்றனர்.

   வரப்படுவனவற்றில் தேர்ந்தெடுக்கப்படும் நிலந்தருதிருவின் பாண்டியன், பனம்பாரனார் ஆகிய ஒவ்வொருவர் படத்திற்கும் உரூபாய் 5,000 வீதம் மொத்தம் உரூபாய் 10,000 பரிசு அளிக்கப்படும். ஒருவரே இருவருக்கும் படங்கள் வரைந்து அனுப்பலாம்; எத்தனைப்படங்களையும் அனுப்பலாம்.

 

படங்களை முதலில் ஒளிப்படமாக எடுத்து,

 

இலக்குவனார் திருவள்ளுவன்,

தலைவர் தமிழ்க்காப்புக்கழகம்,

23எச்.,ஓட்டேரிச்சாலை,

புழுதிவாக்கம், சென்னை 600 091

பேசி 98844 81652

 

முகவரிக்கு அனுப்ப வேண்டும். அவற்றில் தெரிவு செய்யப்படும் படங்கள் மட்டும் கேட்டுப் பெறப்படும். அவற்றிலிருந்து பரிசுகளுக்குரிய படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

   போட்டியில் பங்கேற்கும் அனைவரும், படங்களுடன், பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி / அலைபேசி எண்கள் ஆகியவற்றையும் அனுப்ப வேண்டும்.

  இரு பரிசுகள் தவிர, பங்கேற்கும் அனைவருக்கும் சிலை திறப்பு விழாவின் பொழுது பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

   படத்தை ஏற்ற அளவிலும் பொருத்தமான வண்ணங்கள் பயன்படுத்தியும் வரையுமாறு வேண்டப்படுகின்றனர்.

   போட்டியில் அகவை, கல்வி, நாடு வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

 

ஒளிப்படங்கள் வந்து சேருவதற்கான இறுதி நாள் :

மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016

 

இவ்வாறு தலைநகரத் தமிழ்ச்சங்க நிறுவனர் புலவர் த.சுந்தரராசன் அறிவித்துள்ளார்.