அருள்மிகு இசக்கி அம்மன் கோயில் குடமுழுக்கு

புரட்டாசி 01, 2048 / 17.09.2017 காலை 8.00 அருள்மிகு இசக்கி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கனக்காவிளை, தெருவுக்கடை அஞ்சல் குமரி மாவட்டம் 629 157  

தொல்காப்பிய ஓவியப்போட்டி – மொத்தப் பரிசு உரூபாய் 25,000

தொல்காப்பிய ஓவியப்போட்டி – மொத்தப் பரிசு உரூபாய் 25,000   கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்பிக்காடு என்னும் ஊரில் தொல்காப்பியருக்குச் சிலை எழுப்பப்பட்டுள்ளது. அச்சிலையைச் சுற்றி எண்மாடக்கூடமும் உச்சித்தளமுமாக 9 தளங்கள் கொண்ட தொல்காப்பியர் கோபுரம் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.   சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் கல்வெட்டுகளாகவும் தொல்காப்பியர், தொல்காப்பியம்பற்றிய செய்திகளும் தொல்காப்பிய விளக்கப் படங்களும் அமைய உள்ளன. எனவே, தொல்காப்பியர் குறிப்பிடும் அறிவியல் செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாட்டுச்செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் அகத்திணைச் செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்திணைச் செய்திகள் எனப் பல்வேறு  கருத்துகளை விளக்கும் ஓவியங்கள் வரவேற்கப்படுகின்றன….

நிலந்தரு திருவின் பாண்டியன், பனம்பாரனார், உருவ ஓவியப்போட்டி – பரிசு உரூபாய் பத்தாயிரம்

நிலந்தரு திருவின் பாண்டியன், பனம்பாரனார், உருவ ஓவியப்போட்டி – பரிசு உரூபாய் பத்தாயிரம்   புலவர் த.சுந்தரராசன் அறிவிப்பு   தலைநகரத் தமிழ்ச்சங்கம் குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் தொல்காப்பியர் சிலை அமைக்க உள்ளது. வரும் சித்திரை முதல் வாரம் இதற்கான விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் தொல்காப்பியம் அரங்கேறிய அவையை – தமிழ்ச்சங்கத்தை – நடத்திய வேந்தர் நிலந்தரு திருவின் பாண்டியன் படமும், தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய புலவர் பனம்பாரனார் படமும் திறக்கப்பட வேண்டும் எனச் சிலையமைப்புக் குழு முடிவெடுத்துள்ளது. எனவே, தமிழன்பர்களும் ஓவியர்களும்…