இலங்கை நிலவெடிப்பு03 :ilangai_nilavedippu03இலங்கை நிலவெடிப்பு07 : ilangai_nilavedippu07

பாரிய நிலவெடிப்பு 48 குடும்பங்களைச் சேர்ந்த

110 பேர் இடம் பெயர்வு

  கல ஃகா, துனாலி, மல்பேரி பிரிவு  ஊரில் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட பாரிய நில வெடிப்பின் காரணமாக 48 குடும்பங்களைச் சேர்ந்த 191 பேர் இடம் பெயர்ந்து  துனாலி  தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர். குறித்த  பகுதியில் பல இடங்கில் பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீடுகள் வெடித்துள்ளன மரங்கள் சாய்துள்ளன. சில மரங்கள் சாயும் நிலையில் காணப்படுகின்றன. நீர் ஓட்டம் மற்றும் கசிவு அதிகமாகக் காணப்படுகின்றன. இதனால் இவர்களைக் குறித்த இடங்களில் இருந்து வெளியேறுமாறு   பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுரறுத்தலை வழங்கியுள்ளனர். தற்போது  ஊர்ச் சேவகரின் உதவியுடன்  பகுதிச் செயலகம் இடம் பெயர்ந்த மக்களுக்குத் தேவையான வசதிகளை மேற் கொண்டு வருகின்றது.

  பாதிக்கபட்ட 191 பேரில் 15  அகவைக்குக் கீழ்ப்பட்ட சிறுவர்கள் 68 பேர் அடங்குகின்றனர். பாதிக்கபட்ட 48 குடும்பங்களில் 28 குடும்பங்கள் எந்தவிதக் காரணமும் இன்றி அவர்களின் குடியிருப்புகளுக்கு மீண்டும் அனுப்ப முடியாத நிலை தோன்றியுள்ளது. 20 குடும்பங்கள் பாதுகாப்பு காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

 (படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.)