பாவலர் கருமலைத்தமிழாழன் நூலுக்குப் பரிசு
பாவலர் கருமலைத்தமிழாழன் நூலுக்குப் பரிசு
தேனி மாவட்டம் கம்பத்தில் 37 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, ஒவ்வோர் ஆண்டும் தமிழில் வெளிவந்த கவிதை நூல்களில் சிறந்த நூலைத் தேர்ந்தெடுத்து விருதும், பொற்கிழியும் வழங்கிப் பெருமைபடுத்தி வருகிறது.
2016 ஆம் ஆண்டில் சூலை மாதம் வரை வெளிவந்த கவிதை நூல்களில் ஓசூரைச் சேர்ந்த பாவலர் கருமலைத்தமிழாழன் எழுதிய ‘செப்பேடு’ மரபுக் கவிதை நூலை இவ்வாண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுத்தது. ஆடி 31, 2047 / 15 -08 – 2016 திங்களன்று. கம்பத்தில் பேரவைத் தலைவர் கவிஞர் பாரதன் தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உலகத்தமிழ்ச்சங்கத்தின் இயக்குநர் முனைவர் கா.மு. சேகர், பரிசு பெற்ற பாவலர் கருமலைத்தமிழாழனுக்கு விருதும், பொற்கிழியும் வழங்கிச் சிறப்பித்தார்.
கிழக்கு வாசல் உதயம் இலக்கிய மாத இதழின் ஆசிரியரும் சிறந்த சிறுகதை ஆசிரியருமான உத்தமச்சோழன், இனிய நந்தவனம் இலக்கிய மாத இதழின் ஆசிரியர் சந்திரசேகர் ஆகியோர் பரிசு பெற்ற பாவலரை வாழ்த்திப் பேசினார்கள்.
முடிவில் பேரவைச் செயலர் ஆதித்தன் நன்றி கூறினார்.
செய்தி: கருமலையன்பன்
Leave a Reply