புசல்லாவ இந்து தேசியக் கல்லூரியில் மண்சரிவுப் பேரிடர்
புசல்லாவ இந்து தேசியக் கல்லூரியில் மண்சரிவுப் பேரிடர்!
பெற்றோர்கள் மாணவர்கள் அச்சத்தில்!
தொடர்ந்து மலையகத்தில் காணப்படும் சீரற்ற காலநிலையில் புசல்லாவ இந்து தேசியக்கல்லூரி மண்சரிவு கண்டத்தை எதிர்நோக்கியுள்ளது. குறித்த கல்லூரியின் திடலில் இடி மின்னலுடன் மழை பெய்த வேளையில் ஏறத்தாழ 25 அடி ஆழமான குழி ஒன்று உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாகப் பாடசாலை கட்டடங்களில் சிறு சிறு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். நிலைமை தொடர்பாக ஊர்ச்சேவகர் ஊடாக உடபளாத்த பகுதிச் செயலாளருக்கும் பேரிடர் முகாமைத்துவ நிலையத்திற்கும் அறிவிக்கப்பட்டு ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அவலம் ஓராண்டிற்கு முன்பிருந்தே படிப்படியாக இடம் பெற்று வருகின்றது. அதிகாரிகள் ஆய்வுகளை மேற் கொள்கின்றார்களே தவிர இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை. இந்தப் பாடசாலையில் 1100 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றார்கள் என்பதும் குறிப்பிட தக்கது
எனவே தொடர்வுடைய அதிகாரிகள் இதற்கான உரிய தீர்வினைப் பெற்றுத் தருமாறு பாடசாலை நிருவாகம் கேட்டுக் கொள்கின்றது
மேல்விவரங்களுக்கு:
புசல்லவா செயலர் பேசி எண் : 0718501616
பள்ளி முதல்வர் பேசி எண்கள் : 0812478414, 0718393053
கல்வி அலுவலர் பேசி எண் : 0719911772
Leave a Reply