“ஆசியாவின் சின்னங்கள்(icons of Asia) 2022” விருது

புதுதில்லியில் “உலகளாவிய பேரரசு நிகழ்வுகள்(Global Empire Events)” என்ற அமைப்பின் சார்பில்  “ஆசியாவின் சின்னங்கள்(icons of Asia) 2022” விருது வழங்கும் விழா நடந்தது.

 இந்த விழாவில் இராமநாதபுரம் மாவட்டம்  முதுகுளத்தூரைச் சேர்ந்த  அசன் முகம்மதுவுக்குச்  “சிறந்த (மென்பொருள்) கணியக் கட்டுமானப் பொறியாளர் 2022” விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

 இந்தப் பிரிவில் போட்டியிட்ட ஆசியக் கண்டத்திலுள்ள பல்வேறு முன்னணிக் கணிய(மென்பொருள்) நிறுவனங்களைச் சேர்ந்த முப்பத்து எண்மரில் சிறந்த ஒருவராக அசன் முகம்மது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது.  கல்வி, தொழில், பொதுத் தொண்டில் சிறந்து விளங்குபவர்கள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறார்கள்.

இந்த வருடம் தில்லி துவாரகாவில் உள்ள “கதிர்நீல/ரேடிசன் புளூ உறைவகத்தல் (Radisson blue hotel) இந்த விழா சிறந்த முறையில் நடந்தது.

விருது பெற்ற அசன் முகம்மது  தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் உறுதுணையாக இருந்த அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் நன்றியை  உரித்தாக்கினார். முதன்மையாகத் தனது பொறியியல் கல்லூரிப் படிப்பைச் சிறந்த முறையில் நிறைவு செய்யத் தனது உடல் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டுக் கல்லூரிக் கட்டணத்தைசங செலுத்த உதவிய  அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்தார்.

 அவருடைய அருவினை/சாதனை மேன்மேலும் தொடரப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்துகள் தெரிவிக்க :

+91 95001 68656

முதுவை இதாயத்து

துபாய், ஐ.அ.நா.

00971 50 51 96 433