[மார்கழி 07, 1953 /திசம்பர் 19, 1922 –
மாசி 24, 2051/மார்ச்சு 7, 2020]

இதழாளர், நூலாசிரியர், சட்டமன்ற மேலவை உறுப்பினர்(1962),நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்(1967-71), தமிழகச் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் முதலானபொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியவர், இனமானப் பேராசிரியர் எனச் சிறப்பிக்கப்படுபவர், திராவிடர் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர், பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய  க.அன்பழகனார், நலக்குறைவின் காரணமாகவும் முதுமையின் காரணமாகவும் மரணம் உற்றார்.

அவரின் மறைவிற்கு இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம், தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள், அகரமுதல மின்னிதழ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.