பைந்தமிழ்ச்செம்மல்விருது :mu.balasubramaniayan_virudhu

  ஆனி 04, 2047 / 18-06-2016 அன்று மணலூர்ப்பேட்டையில் தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம், மணலூர்ப்பேட்டை தமிழ்ச் சங்கம்,  நிலாமுற்றம் மாத இதழ் இணைந்து  வானவில் விழா நடத்தின.

  புதுவைத்தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன்  சிறந்தமுறையில் தமிழ்த் தொண்டாற்றி வருவதைப் பாராட்டி இவ் விழாவில் “பைந்தமிழ்ச் செம்மல்” விருது அவருக்கு வழங்கப்பட்டது.

   பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் கோ.தாமோதரன், சின்னத்திரை நடிகர் கவிஞர். கலைமாமணி அமர சிகாமணி, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் சுடர். முருகையா ஆகியோர்  விருது வழங்கிப் பாராட்டினர்.

  தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கப் பொதுச்செயலாளர் தமிழரிமா தா.சம்பத்து விழா ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தார்