பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை மீறும் மக்கள்
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணைப்பகுதில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை மீறி இப்பகுதி மக்கள் செயல்படுகின்றனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை உள்ளது. மூலையாறு, தலையாறு, வறட்டாறு ஆகிய ஆறுகளில் இருந்து வரும் நீரைத்தேக்கி மஞ்சளாறு அணையாகக் கட்டப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணையின் கொள்ளளவு 57 அடியாகும். தற்பொழுது மேற்குமலைத்தொடர்ச்சியில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் மஞ்சளாறு அணை திண்டுக்கல், தேனி மாவட்ட மக்களுக்குக் குடிநீர் தேவைக்காகவும், பாசனவசதிக்காகவும் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகத் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் மஞ்சளாறு அணையில் குளிப்பதற்கும், துவைப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இதனைக் கண்காணிப்பது பொதுப்பணித்துறையினர் வேலை. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் மஞ்சளார் அணைக்கு வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மஞ்சளாறு அணையில் குளிப்பதும், துவைப்பதும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் ஆபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை மீறும் பொதுமக்களையும், கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறையினர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Leave a Reply