மக்கள்நலக்கூட்டணி :makkal-nala-kuutani

மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும்! – வைகோ

  ம.தி.மு.க. மாணவரணி மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் எழும்பூரில் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று (மாசி 16, 2047 / பிப்.28, 2016) நடந்தது.

  அதன்பின் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகச் சட்டசபைத் தேர்தல் பணிகள் குறித்தும், மக்கள் நலக் கூட்டணி வெற்றி வாய்ப்பு குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடத்துவதற்காக மாணவரணி அறிவுரைக் கூட்டத்தை நடத்தினோம். இதில் பிரமிக்கதக்க வகையில் மக்கள் நலக் கூட்டணிக்குப் பேராதரவு கிடைத்துள்ளது. இளைஞர்கள், மாணவர்கள், சமூக வலைத்தளங்கள், முகநூல், குறுஞ்செய்தி மூலமும் ஆதரவு கிடைத்துள்ளது.

  தமிழகம் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் இடையே பெரும் ஆதரவு மக்கள் நலக் கூட்டணிக்கு கிடைத்து உள்ளது.

  மக்கள் நலக்கூட்டணி வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். ஊழல், மது, இல்லாத தமிழகத்தை உருவாக்க மக்கள் நலக்கூட்டணி பாடுபட்டு வருகிறது.

  இவ்வாறு வைகோ மக்கள்நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும் எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.