மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை மேம்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை
மேம்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை
– மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன்
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் தற்பொழுது 440 ஆசிரியப் பயிலுநர்கள் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இந்த ஆசிரியப் பயிலுநர்கள் தங்குவதற்கான விடுதிகள், கற்றல் சூழல் முதுலியன பெரும் குறைபாடுகளுடன் காணப்படுகின்றன. இதனைக் குறுகிய காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்காகவும் திருத்த வேலைகளை மேற்கொள்வதற்காகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மாநிலக்கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் இதனைப் பார்வையிட்டார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரான ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம், கல்வி அமைச்சின் தமிழ்க் கல்வி மேம்பாட்டுப் பணிப்பாளர் எசு.முரளிதரன், பாடசாலை வேலைகள் பகுதிக்கான பணிப்பாளர் யு.சி.வை. அபேசுந்தர, கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
முதற் கட்டமாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த செய்ய 50 பேராயிரம்(மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளதுடன் கலாசாலையின் அனைத்துத் திருத்தங்களுக்குமான தகவல்கள் பெற்று அனைத்து வசதிகளையும் குறுகிய காலத்தில் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
Leave a Reply