மத்தியில் மதச்சார்பற்ற அரசு உருவாக வேண்டும்: மு.க.தாலின் பேச்சு
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை ஆற்றி வரும் மு.க.தாலின் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சின்னசாமியை ஆதரித்து தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாக்குஅளிக்குமாறு கேட்டார்விராலிமலையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் மணப்பாறை, வையம்பட்டி, வட மதுரை, மற்றும் குசிலியம் பாறை ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து கரூர் திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மு.க.தாலின் கலந்து கொண்டு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சின்னசாமியை ஆதரித்து பேசிய தாவது:–
“கருர் சட்டன்றத் தொகுதியில் கடந்த திமுக. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.
அதில் உரூ.600 கோடி மதிப்பில் தாள் ஆலை விரிவுபடுத்ததும் திட்டம், ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், போக்குவரத்து அலுவலகம், நகராட்சி புதிய கட்டடம். கரூர் திருமாநிலையூர் அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம், வெங்கமேடு இருப்பூர்தி மேம்பாலம் புதிய சவுளிப் பூங்கா, கரூர் நகருக்கு நான் தொடங்கி வைத்த குடிநீர்த் திட்டம்,
பள்ளி வரை செயல்பட்ட பேருந்துப் பயணச் சலுகைத் திட்டம் கல்லூரி வரை கொண்டு வரப்பட்டது, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டது, படித்து முடித்த பின் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு தொழில்நுட்பப்பூங்க உருவாக்கப்பட்டது,
இதன் மூலம் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெற்ற வேலைவாய்ப்பு, எனப் பலவற்றைக் கூறலாம்.
மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து ம.சின்னசாமியை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க. தலைவர் கருணாநிதி சுட்டி காட்டுபவர்தான் தலைமையாளர்-பிரதமர்- என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தி.மு.க.விற்கு ஆதரவு தரவேண்டும். கருணாநிதியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.
Leave a Reply