தேவகோட்டை- தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில்   வாணாள் இடரீட்டுக் கழகம்(எல் .ஐ.சி.) சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.

 விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

  தேவகோட்டை  வா.இ.க./எல்.ஐ.சி.கிளை மேலாளர் மோகன சுந்தரம் மாணவர்களுக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி   இடரீட்டுக் கழகம் .வைரவிழா கொண்டாடுவதைக் குறித்து சிறப்புரையாற்றினார். கிளையின் வளர்ச்சி அதிகாரி தமிழரசு முன்னிலை வகித்தார்.

இந்திய  வாணாள் இடரீட்டு நிறுவனம் தொடர்பாக  இராசி என்ற மாணவியும், அதன் செய்லபாடுகள், பயன்பாடுகள்பற்றி மாணவிகள் தனலெட்சுமியும், பரமேசுவரியும்,  இடரீட்டின்(காப்பீட்டின்) பயன்கள் தொடர்பாக உமாமகேசுவரியும் பேசினார்கள்.

  முத்தையன், ஆகாசு, தேவதர்சினி, ஈசுவரன், அசய் பிரகாசு, சஞ்சீவு, செனிபர், கார்த்திகா, பார்கவிஇலலிதா, பரத்துகுமார் ஆகிய 10 மாணவர்களுக்கு விருதுகளும்,சான்றிதழ்களும்  அக்கழகத்தின்  சார்பாக வழங்கப்பட்டன.ஏராளமான பெற்றோர்களும்  இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

  ஆசிரியர்  சிரீதர் நன்றி கூறினார்.