முதல்வர் பதவி விலகத், தடையை மீறி நாளை (21.8.)ஆர்ப்பாட்டம் . வைகோ
முதல்வர் பதவி விலகத் தடையை மீறி
நாளை (21.8.)ஆர்ப்பாட்டம் . வைகோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தி நாளை (21.8.17) சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் கருநாடக அரசு அணை கட்டுவதற்கு எந்த மறுப்பையும் தெரிவிக்காத தமிழக அரசைக் கண்டித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தியும் நாளை மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் இசைவு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “நாளைத் தடையை மீறி அறவழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்” என்று கூறினார்.
மேலும், எடப்பாடி அரசு தமிழக நலன் அனைத்தையும் மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் வைகோ குற்றம்சாட்டினார்.
++
Leave a Reply