வந்தவாசியில் முப்பெரு விழா
வந்தவாசியில் முப்பெரு விழா
வந்தவாசி அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நேற்று (வைகாசி 27, 2050/ சூன் 10, 2049) முப்பெரு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார்.
கிளை நல்நூலகர் பூ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
இராமலிங்கம் எரிநெய் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், அரசுக் கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள், உலக இரத்தத்தான நாள், போதைப் பொருள்- சட்டவிரோதக் கடத்தலுக்கான பன்னாட்டு எதிர்ப்பு நாள் ஆகிய முப்பெரு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கரூர் வைசியா வங்கியின் வந்தவாசி கிளை மேலாளர் சி.சங்கர் பங்கேற்றார்.
தேசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேனாள் தலைமையாசிரியர் குப்பன், கவிஞர் சாகீர் உசேன் முதலானோர் கலந்துகொண்டனர்.
நிறைவாக, வந்தவாசி அரசுக்கிளை நூலகர் சா.தமீம் நன்றி கூறினார். நூலக உதவியாளர்
பு.நாராயணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
– வந்தை அன்பன்
Leave a Reply