வருவாய்த்துறை மரங்கள் கடத்தல்
வருவாய்த்துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ள
மரங்கள் வெட்டிக் கடத்தல்
தேவதானப்பட்டிப் பகுதியில் வருவாய்த்துறைக்குச் சொந்தமாக உள்ள இடங்களில் உள்ள தேக்கு மரங்கள் முதலான விலை உயர்ந்த மரங்களை வெட்டிக் கடத்திவருவது வழமையாக உள்ளது.
தேவதானப்பட்டிப் பகுதியில் வருவாய்த்துறைக்குச் சொந்தமாக ஆற்றின் கரைகளிலும், குளங்கள், கண்மாய்களிலும் மரங்கள் வளர்க்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளன. இவற்றைத்தவிர வனத்துறை சார்பில் மரக்கன்றுகளும் நடப்பட்டு அவையும் நன்றாக விளைந்த நிலையில் உள்ளன. இதனைக் கண்காணிக்கும் மருமக்கும்பல் கண்மாய், ஆறுகளின் கரைகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமாக உள்ள மரங்களை வெட்டிக் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு மரங்கள் வெட்டிக்கடத்தப்படுவது இது ஐந்தாவது முறையாகும். ஆனால் மரங்கள் கடத்தியவர்கள்மீது இதுவரை வனத்துறை அதிகாரிகளோ, வருவாய்த்துறை அதிகாரிகளோ வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
இதே நிலை தொடர்ந்தால் அரசிற்குச் சொந்தமாக உள்ள விலைஉயர்ந்த மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுச் சோலைவனமாக உள்ள பகுதி பாலைவனமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Leave a Reply