தலைப்பு-ஆவணத்திட்டம்;thalaippu_aavanathittam

வாழும் தமிழ்அறிஞர்கள், தமிழார்வலர்கள்  ஆவணத்திட்டம்

மரு.மு.செம்மல் மணவை முத்தபா  அறிவியல் தமிழ்மன்றம் சார்பில் வாழும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் பற்றிய ஆவணப் படத்தொகுப்பு உருவாக்கப்படுகின்றது.

தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் தங்களைப் பற்றியும் தமிழியல் கருத்துகள் பற்றியும் 20 நிமையக் காலஅளவில் பேசுவதை ஆவணமாக்கும் இத்திட்டத்திற்கு ஒருவருக்குக் குறைந்த அளவில் உரூபாய் ஆயிரம்  ஆகும். இதில் உரூபாய் ஐந்நூறு மணவை முத்தபா அறிவியல் தமிழ்மன்ற அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும். எஞ்சிய தொகையை உரியவர் அல்லது அவர் சார்பில் பிறர் அளித்துதவ வேண்டும்.

தஞ்சாவூர் – திருவாரூர் பகுதிகளில் வாழும் தமிழ் மொழி அறிஞர்களை ஆவணப்படுத்தும் பணிகள் வருகிற

ஆவணி 11, 2047 /ஆக. 27 சனிக்கிழமை முதல்

  ஆவணி 14, 2047 / ஆக. 30 செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும்.

சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் பிற மாநிலங்களிலும் உரியவர்கள் தொடர்பிற்கு இணங்க அடுத்து ஆவணப்பணி நடைபெறும்.

விருப்பமுள்ள அறிஞர்கள் தொடர்பு கொள்ளவும்:

பேராசிரியர்.  மருத்துவர் மு. செம்மல்
8939462185
appliedtamil@gmail.com