மொரிசியசு நாட்டில் திருக்குறள் தேசிய மாநாடு

மொரிசியசு   நாட்டில்  திருக்குறள்  தேசிய மாநாடு   மொரிசியசு  நாட்டில்  திருக்குறள்  தொடர்பான தேசிய மாநாடு இம்மாதம் 6-ஆம் நாள் மிகச்சிறப்பாக நடை பெற்றது. அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பு (INTAD), சென்னை, ஆசியவியல்  நிறுவனத்தின்  கூட்டுறவோடு   இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மொரிசியசு நாட்டின்  முன்னாள் கல்வியமைச்சரும், கஅபபஅ(யுனெசுகோ) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும்,  மொரிசியசு நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பின் தலைவருமான பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் இம்மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்துப் பன்னாட்டுத்தரத்துடன் மிகச்சிறப்பாக…

வாழும் தமிழ்அறிஞர்கள், தமிழார்வலர்கள் ஆவணத்திட்டம்

வாழும் தமிழ்அறிஞர்கள், தமிழார்வலர்கள்  ஆவணத்திட்டம் மரு.மு.செம்மல் மணவை முத்தபா  அறிவியல் தமிழ்மன்றம் சார்பில் வாழும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் பற்றிய ஆவணப் படத்தொகுப்பு உருவாக்கப்படுகின்றது. தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் தங்களைப் பற்றியும் தமிழியல் கருத்துகள் பற்றியும் 20 நிமையக் காலஅளவில் பேசுவதை ஆவணமாக்கும் இத்திட்டத்திற்கு ஒருவருக்குக் குறைந்த அளவில் உரூபாய் ஆயிரம்  ஆகும். இதில் உரூபாய் ஐந்நூறு மணவை முத்தபா அறிவியல் தமிழ்மன்ற அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும். எஞ்சிய தொகையை உரியவர் அல்லது அவர் சார்பில் பிறர் அளித்துதவ வேண்டும். தஞ்சாவூர் – திருவாரூர் பகுதிகளில் வாழும்…