கல்வி  இணையமைச்சர் வே.இராதாகிருட்டிணன் :radhakrittinana,kalviyamaichar

20.04.16 அன்று வழங்கப்படவிருந்த பெருந்தோட்ட

500 உதவி ஆசிரியர்களுக்கான நியமனம்

27 ஆம்  நாளுக்குப் பிற்போடப்பட்டுள்ளது

   பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை மையமாகக் கொண்டு வழங்கப்பட்டு வரும் பெருந்தோட்ட உதவி ஆசிரியர்கள் 3021 பேரில் 820 பேர் பேருக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்களில் முதல் கட்டமாக 500 பேருக்கு 27.04.2016 ஆம்  நாள் நியமனம் வழங்கவுள்ளதாகக் கல்லி  இணையமைச்சர் வே.இராதாகிருட்டிணன் தெரிவித்தார். குறிப்பாக இந்த நியமனம் 20.04.2016 அன்று வழங்கப்படும் என்று ஏற்கெனவே கூறப்பட்டருந்தது. சித்திரை புதுவருட காலப்பகுதியில் போக்குவரத்துச் சிக்கல்கள், மடல் கிடைப்பதில்  காலத்தாழ்ச்சி அதிகமாகக் காணப்படும் என்ற காரணங்களால் நியமன ஆணை வழங்க நாளை மாற்றுமாறு பலர் கேட்டுக் கொண்டதற்கு இனங்க இந்த மாற்றம் மேற் கொள்ளபட்டது. எது எவ்வாறாயினும் குறித்த  நாளில்  இந்த நியமனம் வழங்கப்படும.; தெரிவு செய்யபட்ட பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது  அஞ்சலிடப்பட்டுள்ளன.

பெயர்-திருஞானம் : name_peyar_paa.thirugnaanam