‘இலக்கிய வீதி இனியவன்’ நூல் வெளியீட்டுப் படங்கள்

 

இராணிமைந்தன் நூல் வெளியீடு

 DSC04897
சென்னை யில் புரட்டாசி 26, 2045 / 12.10.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு எழுத்தாளர் இராணிமைந்தன் எழுதிய ‘இலக்கியவீதி  இனியவன்’ வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு நடைபெற்றது. உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரும் பங்கேற்கும் திருமண விழா போன்ற குடும்ப விழாவாக இலக்கிய   வீதி இனி்யவனின்  அன்பர்கள், படைப்பாளர்கள், சுற்றத்தினர், கம்பன் கழகத்தினர், என அனைவரும்  பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, கவிஞர் மலர்மகன் வரவேற்புரை யாற்றினார்.அருளாளர் இராம.வீரப்பன் தலைமையில் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன்  நூலை வெளியிட, முனைவர் செகத்துஇரட்சகன் முதல் படியைப் பெற்றுக் கொண்டார்.முனைவர் ஔவை நடராசன், முனைவர் சிலம்பொலி செல்லப்பன், கவிஞர் ஈரோடு தமிழன்பன்,  கிருட்டிணா இனிப்பக ம.முரளி,  தாமரைத்திரு நல்லி குப்புசாமி, படநிறுவனர் ஏவி.எம்.சரவணன்,  இயக்குநர் எசு.பி.முத்துராமன்,  அரிமா வரதராசன்,  கலைஞன் பதிப்பக மா.நந்தன், ஆகியோர் வாழ்த்தினர். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் நூல் மதிப்புரை வழங்கினார்.  நூலாசிரியர் இராணிமைந்தன் நூலுரை  வழங்கினார்.  இலக்கியவீதி இனியவன் சார்பில் அவர் மகள் வாசுகிபத்ரிநாத்து ஏற்புரை வாசித்தார். முனைவர் சாரதா நம்பி ஆருரன் தொகுத்து வழங்கினார்.

திரு பத்ரிநாத்து, செல்வி ப.யாழினி ஆகியோர்  விழாக்குழுவினருடன் இணைந்து மேடைப்பணிகளை ஆற்றினர்.

  விழாவின் தொடக்கத்தில் இலக்கியவீதி இனியவன் பற்றிய குறும்படம் காட்டப்பட்டது.  இதனை உருவாக்கிய இனியவன் ப.சிபி, மு.க.பகலவன் ஆகியோரைச் சிறப்பித்தனர்.

படத்தொகுப்பு : படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்!

 

Related Posts

ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு  : புதிய கால வரையறைகள்

ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு  : புதிய கால வரையறைகள்

உங்கள் குறள் நூலைத் திருக்குறள் மாநாட்டில் வெளியிட விரும்புகிறீர்களா?

உங்கள் குறள் நூலைத் திருக்குறள் மாநாட்டில் வெளியிட விரும்புகிறீர்களா?

முனைவர் வை.பழனிச்சாமி இ.ஆ.ப. வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு

முனைவர் வை.பழனிச்சாமி இ.ஆ.ப. வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு

கவிதைக் குரல்கள் – நூல் வெளியீடு

கவிதைக் குரல்கள் – நூல் வெளியீடு

‘திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்’ நூல் வெளியீடு

‘திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்’ நூல் வெளியீடு

கருத்தில் வாழும் கவிஞர்கள் –  20 ஆவது நிகழ்வு

கருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *