எழுத்தாளர் அ.வெண்ணிலாவுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’
எழுத்தாளர் அ.வெண்ணிலாவுக்கு
‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’
எசுஆர்எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளைத் தந்த படைப்பாளிக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறார்கள். இந்த ஆண்டிற்கான எசுஆர்எம் தமிழ்ப் பேராயம் வழங்கும் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’க்கு எழுத்தாளர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலா, இதுவரை கவிதை நூல்கள் – 7, சிறுகதை நூல்கள் -4, கட்டுரை நூல்கள் – 6, தொகுப்பு நூல்கள் – 6, கடித நூல் – 1, புதினம் – 2 என 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இவரைப்போலவே பல்வேறு விருதுகள் பெற்றுள்ள படைப்பாளர் கவிஞர் முருகேசன் இவரின் கணவராவார்.
அ.வெண்ணிலா குறித்து அறிய காண்க –
Leave a Reply