கவிஞர் அ.வெண்ணிலாவிற்குப் புதுமைப்பித்தன் விருது

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினைத்’ தமிழ்ப் பேராயம் வழங்கியது சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள திரு.இரா.நி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப்பேராயத்தின் எட்டாம் ஆண்டுவிழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ எனும் வரலாற்றுப் புதினத்திற்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’யும், பரிசுத் தொகை உரூ.50 ஆயிரமும் வழங்கினர். இவ்விழாவிற்கு, திரு.இரா.நி.(எசுஆர்எம்) பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தா.இரா.பாரிவேந்தர் தலைமையேற்றார். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராசன் வரவேற்புரையாற்றினார். கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் அ.வெண்ணிலாவுக்குப் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருருதினை’யும்,…

எழுத்தாளர் அ.வெண்ணிலாவுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’

எழுத்தாளர் அ.வெண்ணிலாவுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’                  எசுஆர்எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளைத் தந்த படைப்பாளிக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறார்கள். இந்த ஆண்டிற்கான எசுஆர்எம் தமிழ்ப் பேராயம் வழங்கும் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’க்கு எழுத்தாளர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலா, இதுவரை கவிதை நூல்கள் – 7, சிறுகதை நூல்கள் -4,  கட்டுரை நூல்கள் – 6, தொகுப்பு நூல்கள் – 6, கடித…