[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

திராவிட இயக்கத் தமிழர் பேரவை  சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது

 இதனில் மேனாள் தொல்லியல்துறையாளர்  சாந்தலிங்கம், தொல்லியல் வரலாற்று ஆர்வலர் வெங்கடேசன் ஆகியோர்  தம் கருத்துரைகள் வைத்தனர்

சாந்தலிங்கம்  முன்பு நடந்த அகழாய்வுகள் கீழடியைவிடப் பெரும் அளவில் முதன்மை வாய்ந்தன. அவற்றின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை எனினும் தமிழகம்தான்

 வட இந்தியாவைவிட முந்தியது மட்டுமல்ல எழுத்தறிவுடன்கூடிய நாகரிகத்தில் மூத்தது   அசோகர் காலத்தைவிடச் சில நூற்றாண்டு முந்தைய கல்லெழுத்துகள் தமிழகத்தில்தான் கிட்டியுள்னள.

 மூன்று அடுக்குகள் உள்ள கால வெளியில் மிகக் கீழே குறியீடுகள் கொண்ட மட்பாண்ட ஓடுகளும் நடுவில் குறியீடுகளும் எழுத்தும் கலந்ததும்  அதற்கு மேல் அடுக்கில் வெறும் எழுத்துகளும் காணப்படுத்தலால் தமிழகம் தான் நாகரிகத்தில் மிக முந்தியது.** அதுமட்டுமல்ல தமிழகத்தில் எங்கும் கிடைக்கும் பானை ஒட்டுச் சில்லுகளில் எழுதுபொளிப்புகள் கிட்டும் போது வட இந்தியாவில் அப்படி இல்லை

இன்றுள்ள மதுரை, சங்கக்காலத்தில் இருந்ததுதான். 7ஆம் நூற்றாண்டு முத்தரையன் சுவரன் மாறன் செந்தலைக் கல்வெட்டு   அவன் மணலூரை வென்றான் என்கின்றதால்   (மனலூர்-கொந்தகை கீழடி மூன்றும் அடுத்தடுள்ள ஊர்கள்தான்). இந்தக் கீழடி ஊர் 7 ஆம் நூற்றாண்டில் அழிந்து பட்டிருக்கும்.

வடக்கிலிருந்து மதுரைக்குச் செல்லும் வழியில் 3 வேறுபட்ட தடங்கள் இருந்துள்ளன எனப் பல நூற்றுக்கணக்கான செய்திகளை  விளக்கினார்

 என்னால் நினைவு  கூர்ந்தமட்டில் வைத்துள்ளேன்  ஆனால் இவை யாவும் நூலாக வெளிவரும் என்கிறார் சுப வீர பாண்டியன்

அடுத்து,  கருத்தரங்கில் பேசிய வெங்கடேசன் என்பர்தான் இப்போது கீழடியில் நடை பெறுவது எப்படி முதன்மை வாய்ந்தது என விளக்கினார்.

“இப்போதுதான் ஓர்  சமுதாயம் மிக்க நாகரிகத்துடன் வாழ்ந்ததுபற்றிக் கிட்டியுள்ளது இது வடவர்களின் கேலிப்பேச்சினை முறியடிக்கும் சான்றுகளாகி  விட்டது

வடக்கில் நடக்கும் அகழ்வுகளில் அறிக்கைகள் கேட்கப்படாமல் அங்கெல்லாம் தொடரப்படும்போது கீழடியில் மட்டும் ஆள் மாற்றங்கள் கொணரப்பட்டு மிகப்

பெரிய போராட்டங்களால் தான் புதிய தொகைகள் கொடுக்கும் நிலை வந்தது

கீழடியில் 110 காணி (ஏக்கர்) + அடுத்துள்ளது  90  காணி என இரு மேடுகள் உள்ளன. வெறும் 200புதுக்குழி(செண்ட்டு) நிலம்தான் கைவைக்கப்பட்டு அதனில் 100+ குழிகள் தோண்டப் பட்டுள்ளன  இதனிலேயே கிட்டியன  4000 பொருட்கள் என்றால் எல்லாவற்றையும் பார்க்கும்போது என்னவாகும் சொல்லுங்கள் என்றார்

சங்கநூல் குறிப்பிடும் மதுரை திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கு ஆனால்  இப்பொதுள்ள மதுரை வடகிழக்கு. ஆனால் கீழடிதான் நேர் கிழக்கு   எனவே கீழடி  வைகை ஆற்று நாகரிகம் தான் வடஇந்தியதை விட பழமையானது”  என்றார்

 நெறியாளராக இருந்தவர் சுப.வீரபாண்டியன்

** இது கீழடி பற்றியல்ல.

நூ த லோ சு

மயிலை

காணுரை : தரவு கரூர் இராசேந்திரன்

பாகம் 1: https://www.youtube.com/attribution_link?a=BJYxdtyFbao&u=%2Fwatch%3Fv%3Dfjg6sNxHXQM%26feature%3Dshare

பாகம் 2: https://www.youtube.com/watch?v=n-NY4L9J2LI

 

பாகம் 3 :