குறோளி தமிழ் கல்விக் கூடத்தின் 9ஆம் ஆண்டு நிறைவு விழா
பிரித்தானியா குறோளி தமிழ் கல்விக் கூடத்தின் 9ஆம் ஆண்டு நிறைவு விழா மாசி 16, 2046 – 28/02/2015 மாலை 5 மணிக்குத் தொடங்கியது. இந் நிகழ்விற்கு மாணவர்கள் வேட்டியும் சட்டையும் அணிந்தும் மாணாக்கியர் சேலையணிந்தும் வந்திருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்வினைத் தொடக்கி வைத்தனர். தொடர்ந்து பேச்சு, கவிதை, நாடகங்கள் மற்றும் பல கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. மாணவர்கள் ஆசிரியர்களுக்கான மதிப்பளித்தலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
சிறப்பு விருந்தினர்களாகக் குரோளி தன்னாட்சி அவைத் தலைவர் திரு கிளிர் பீட்டர் இலாம்பு(Mr.Cllr Peter Lamb Leader, Crawley Borough Council) , நா.உ. என்றி சுமித்து(Mp Mr Henry Smith) ஆகியோர் வருகை தந்து நிகழ்வுகளைச் சிறப்பித்திருந்தனர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து கண்டு கழிக்க விழா மிகவும் சிறப்புற நடைபெற்றது
- தமிழ்க்கல்விக்கூடம் 9ஆம் ஆண்டுவிழா
- தமிழ்க்கல்விக்கூடம் 9ஆம் ஆண்டுவிழா
- தமிழ்க்கல்விக்கூடம் 9ஆம் ஆண்டுவிழா14
- தமிழ்க்கல்விக்கூடம் 9ஆம் ஆண்டுவிழா
- தமிழ்க்கல்விக்கூடம் 9ஆம் ஆண்டுவிழா13
- தமிழ்க்கல்விக்கூடம் 9ஆம் ஆண்டுவிழா19
- தமிழ்க்கல்விக்கூடம் 9ஆம் ஆண்டுவிழா20
- தமிழ்க்கல்விக்கூடம் 9ஆம் ஆண்டுவிழா
Leave a Reply