ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள்
ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில்
(அறிவியல் பிரிவு)
கலந்து கொண்டு வெற்றி பெற்ற
மாணவர்களுக்கான பரிசில்கள்
கொழும்பு கல்வி அமைச்சில் ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் (அறிவியல் பிரிவு) கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் தலைமை விருந்தினராகக் கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம், மாநிலக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் மங்கள விளக்கேற்றுவதையும் சான்றிதழ்கள் வழங்குவதையும் கலந்து கொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம்.
மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணனின் உரையில்,
ஒரு நாட்டில் தேர்தல் முடிந்த பின்பு அந்த நாட்டு மக்கள் இரண்டு பிரிவாகவோ பல பிரிவுகளாகவோ பிரிந்து நிற்பது அந்த நாட்டின் எதிர்காலத்திற்கும் நாட்டின் மேம்பாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நாட்டு மக்களை ஒன்று திரட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் எனப் பிரித்தன் தலைமையர் இடேவிடு கமருன் தெரிவித்திருக்கின்றார். இந்தக் கருத்தானது எமது நாட்டிற்கு நன்றாகவே பொருத்தமாக இருக்கின்றது. கருத்துகளை நாங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் .
இந்தப் போட்டிகளில் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 118 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் மூன்று தங்கப்பதக்கங்களும், ஏழு வெள்ளிப்பதக்கங்களும் இருபது வெண்கலப்பதக்கங்களும் பங்கு பற்றிய மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து அங்கு பேசிய மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன்,
“ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தன் வெளியேற வேண்டும் என அந்த நாட்டு மக்கள் வாக்களிப்பின் மூலம் தீர்மானித்திருப்பதை அந்த நாட்டின் தலைமையர் இடேவிடு கமருன் ஏற்றுக் கொண்டு நாட்டு மக்களின் தீர்மானத்திற்கு மதிப்பளித்துத் தான் பதவி விலகத் தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கின்றார். இந்த அறிவிப்பானது அவர் தேர்தலில் தோல்வி கண்டவுடன் விடுத்த அறிவிப்பு அல்ல. தனது கருத்தை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் பதவி விலகத் தீர்மானித்திருக்கின்றார்” என்று தெரிவித்தார்.
Leave a Reply