ஈழத்தில் வி.சி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தினால். திருவள்ளுவர் சிலைகள் 16 வழங்கப்பெற்றன!

 திருவள்ளுவர் சிலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள 13 பாடசாலைகளுக்கும் மூன்று பொது அமைப்புகளுக்கும் மாகாணக் கல்வி அமைச்சின் ஊடாகக் கல்வி அமைச்சில்  ஆடி 10, 20417 / 25.07.2016 மாலை 3.00மணிக்கு வழங்கப்பட்டன.  தமிழ் நாட்டில் உள்ள வி.சி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.சி.சந்தோசம் இந்த 16 சிலைகளையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம், மாகாணக்கல்வியமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன், வி.சி.சந்தோசம்  முதலான பலரும் கலந்து கொண்டனர். இந்தத் தேசிய நிகழ்வில் பண்டாரவளை மத்திய கல்லூரி, அட்டன்  ஐலன்சு மத்தியக் கல்லூரி, தெரனியக்கலை கதிரேசன்…

ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள்

ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில் (அறிவியல் பிரிவு) கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள்    கொழும்பு கல்வி அமைச்சில் ஞாலப்போட்டி(ஒலிம்பியாடு)களில்  (அறிவியல் பிரிவு) கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் தலைமை விருந்தினராகக் கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம், மாநிலக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் மங்கள விளக்கேற்றுவதையும் சான்றிதழ்கள் வழங்குவதையும் கலந்து கொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம். மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணனின் உரையில்,  ஒரு நாட்டில் தேர்தல் முடிந்த பின்பு அந்த…

644 மாணவர்கள் சிறப்பிப்பு – நுவரெலியா

க.பொ.த  இயல்புத்தரத் தேர்வில்  5 அ சித்திகளுக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட 644 மாணவர்கள்  சிறப்பிப்பு  மாநிலக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த இயல்புத்தரத் தேர்வில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட 644 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கும் நிகழ்வு   இன்று (ஆனி 19, 2047 / 25.06.2016) காலை 8.30 மணிமுதல் நடைபெற்றது.   மாநிலக்கல்வி அமைச்சின் ஏற்பாட்டில்  வாணாள்காப்புறுதிக்கழகத்தின் (எல்ஐ.சி.) காப்புறுதி நிறுவனத்தின்  ஒத்துழைப்புடன் இவ்விழா நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது….

முல்லைத்தீவில் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறப்பு

முல்லைத்தீவில்  தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறப்பு [கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு]   முல்லைத்தீவு உடையார்கட்டு பெரும் கல்விக்கூடத்தின் (மகா வித்தியாலயத்தின்) தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் ஆனி 02, 2047 / 16.06.2016 அன்று காலை திறந்து வைத்தார்.   இதன்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சிவமோகன், சாந்தி சிறிகந்தராசா ஆகியோரும் கலந்து கொண்டனர். கல்விக்கூடத் தலைவர் வி.சிறீகரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. விருந்தினர்கள் மாலை அணிவித்து அழைத்து வரப்படுவதையும் ஆய்வுக்கூடம் திறந்து வைக்கப்படுவதையும் கலந்து கொண்டவர்களையும் மாணவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடுவதையும் படங்களில்…