தமிழ்க்குடில் நடத்தும் தமிழர் விளையாட்டு விழா
அன்புடைய பெருந்தகையீர்…! வணக்கம். நிகழும் திருவள்ளுவராண்டு 2044 முதல் பொங்கல் விழாவினையொட்டி தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் தமிழரின் பரம்பரை விளையாட்டுகளை நமது இளஞ்சிறார்களிடையே சென்றடையச்செய்து அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் தொடர் விளையாட்டுப் போட்டிகளாக நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் முயற்சியாக அரியலூர் மாவட்டம் சிலம்பூர் என்னும் சிற்றூரில் நடத்தவிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்ற மாவட்டங்களிலும் இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம். நடத்தபடும் விளையாட்டுப் போட்டிகள்: 1. உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் 2. மனப்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் 3. அறிவுசார்ந்த விளையாட்டுகள் 4. நினைவாற்றல் சார்ந்த விளையாட்டுகள். இது போன்ற தலைப்புகளில் தமிழரின் பரம்பரை விளையாட்டுகளைப் பிரித்துக்கொண்டு மாணவர்களுக்குப் பயிற்றுவித்து, பிறகு போட்டி நடத்திப் பரிசும், சான்றிதழும் வழங்கிச் சிறப்பித்தல் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தங்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் தந்து உதவுமாறு தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம். அன்புடன்
தமிழ்க்குடில் ஆட்சிக்குழு.
Leave a Reply