பதிப்புத்துறை வழிகாட்டியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திகழ்கிறது –

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்  திருமலை

 annamalaiuniversity pathipputhurai karutharangam01

அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறை சார்பில் ஆளவை மன்றத்தில் ‘அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பணிகள்’ என்ற தலைப்பில் இருநாள் தேசிய கருத்தரங்கம் திச.23,24 ஆகிய இருநாளிலும் நடைபெற்றது. விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.திருமலை தலைமை வகித்து 120 கட்டுரைகள் அடங்கிய இரண்டு தொகுப்பு நூல்களை வெளியிட்டார். தில்லி சவகர்லால் நேரு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் இரா.அறவேந்தன் நூல்களைப் பெற்றுக்கொண்டு முதன்மையுரையாற்றினார்.

 

விழாவில் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை  பேசும்பொழுது,

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை அரிய நூல்களின் வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் திகழ்கிறது எனப் பாராட்டினார்.

 கருத்தரங்கு நிறைவுவிழாவில் பதிவாளர் என்.பஞ்சநதம் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார். இந்திய மொழிப்புல முதல்வர் மா.கணேசன் தலைமை வகித்தார். முனைவர் பா.திருஞானசம்பந்தம் வரவேற்றார். தமிழியல்துறைப் பேராசிரியர் ப.ஞானம் தொடக்கவுரையாற்றினார். முனைவர் இரா.மலர்விழி நன்றி கூறினார்.