தமிழ்த்தேசியத் தலைவர் 62 ஆவது பிறந்தநாள் விழா – நாம் தமிழர் கட்சி
தமிழ்த்தேசியத் தலைவர்
62 ஆவது பிறந்தநாள் விழா
– நாம் தமிழர் கட்சி
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாளையொட்டி கார்த்திகை 11, 2047 / 26-11-2016 சனிக்கிழமை, மாலை 5 மணியளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமைஅலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்சீமான் தலைமையில் தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முதன்மைப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
முன்னதாக அனைவருக்கும் இனிப்பும் பொங்கலும் வழங்கப்பட்டன, இவ்விழாவில், குழந்தைகளுக்கு அழகு தமிழில் பெயர் சூட்டுவதற்காக ஆட்சிமொழிப்பாசறைப் புலவர் மறத்தமிழ்வேந்தன் எழுதிய 62000 தமிழ்ப் பெயர்கள் கொண்ட ‘அகரமுதலி’ என்ற புத்தகத்தை சீமான் வெளியிட்டார்; ‘தமிழன்’ தொலைக்காட்சி நிறுவனர் கலைகோட்டுதயம் பெற்றுக்கொண்டார்.
மேலும் ‘தம்பி’ மாத இதழ், 2017ஆம் ஆண்டிற்கான ‘உலகத்தமிழர் நாள்காட்டி’ ஆகியவற்றையும் சீமான் வெளியிட்டார்.
தொடர்ந்து இணைப்பில் இருப்போம்.
நன்றி! வணக்கம்!
கு.செந்தில்குமார்
செய்திப்பிரிவு இணைச்செயலாளர்,
நாம் தமிழர் கட்சி
+919600709263
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்]
இணையம்: http://www.naamtamilar.org/
முகநூல்: https://www.facebook.com/NaamTamilarMedia
காணுரைகள்: https://www.youtube.com/NaamThamizharKatchi
சுட்டுரை: https://twitter.com/NaamTamilarOrg
கூகுள்+: https://www.google.com/+NaamTamizhar
Leave a Reply