தேவாரம் ஒப்பித்தல் போட்டி: வென்றவர்களுக்குப் பாராட்டு விழா
தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளியில் தேவாரம் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பாராட்டு விழாவில் ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
தேவாரம் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவர்களில் 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பிரிவில் 8 ஆம் வகுப்பு மாணவி இராசேசுவரி முதல் பரிசையும், 7 ஆம் வகுப்பு மாணவி தனலெட்சுமி, 6 ஆம் வகுப்பு மாணவர் இரஞ்சித்து ஆகிய இருவரும் இரண்டாம் பரிசையும், பெற்றனர். 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள பிரவில் 5 ஆம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன் இரண்டாம் பரிசையும், 3 ஆம் வகுப்பு மாணவி கீர்த்திகா மூன்றாம் பரிசையும், 4 ஆம் வகுப்பு மாணவர் அசய் பிரகாசு ஆறுதல் பரிசையும், பெற்றனர்.
பள்ளித் தலைமைஆசிரியர் இலெ.சொக்கலிங்கம், ஆசிரிய, ஆசிரியைகள் இவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார்கள். தேவாரம் பாடல்களும் விழாவில் பாடப்பட்டன. நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.
Leave a Reply