பஞ்சம் பிழைக்க வந்த சீமை, வெளியீடு06 :panchampizhaikkavandha-seemai06 பஞ்சம் பிழைக்க வந்த சீமை, வெளியீடு01 : panchampizhaikkavandha-seemai07

“பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா

 

  மலையக மூத்த எழுத்தாளர் கலாபூசணம் மு.சிவலிங்கம் எழுதிய “பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா  பங்குனி 26, 2047 / 10.04.2016 ஞாயிற்றுகிழமை வட்டவளை அகரவத்தை மீனாட்சி தோட்ட எல்லை முனியாண்டி கோயில் முன்றிலில் நடைபெற்றது.

 

  மீனாட்சி தோட்டத் தொழிலாளியான திருமதி இராசேசுவரி மகேசுவரன் தலைமையில், மலையக அரசியல் விழிப்புணர்வு கழகமும் மலையகக் கலை, பண்பாட்டு மன்றமும்  ஏற்பாடு செய்த இந்  நிகழ்வில்  சிறப்பு விருந்தினராக நுவரெலியா மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராசு, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ. இலோறன்சு ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை புவனேசுவரனும், நூல் அறிமுகவுரையை சீவன் இராசேந்திரனும் நிகழ்த்தினர். .

 

  நூலின் ஆய்வுரையை  சூரியகாந்தி   இதழின் ஆசிரியர் சிவலிங்கம்  சிவகுமாரன், பேராசிரியர் சே.யோகராசா ஆகியோரும்  கருத்துரையை ஓய்வுபெற்ற தொழிலாளி வீ.பரமசிவமும், ஏற்புரையை நூலாசிரியரும் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]