multi_speciality_hospital02

சென்னை ஒமந்தூரார் அரசு தோட்டத்தில் கட்டப்பட்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையைப் பொது மக்கள் பயன்பாட்டிற்கு முதல்– அமைச்சர்  செயலலிதா, பிப்.21,2014 வெள்ளியன்று திறந்து வைத்தார்.

பன்னோக்கு மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகள் உள்ளன.   வேறு அரசு மருத்துவமனைகளில் இல்லாதmulti_speciality_hospital01 புதிய மருத்துவக் கருவிகள் இங்கு உள்ளன.  தனியார்  உயர்நிலை மருத்துவமனைகளுக்கு  இணையாக அமைக்கப்பட்டுள்ளது.  மூளை, இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை அறுவை மருத்துவம் இல்லாமல் சரி செய்து  பண்டுவம் அளிக்கஉரூ.5 கோடி மதிப்புள்ள இரத்த நாள  அடைப்புநீக்குக் கருவி வாங்கப்பட்டுள்ளது.

நோயாளிகளுக்கு எடுக்கப்படும் ங-கதிர்ப்படங்களை  மருத்துவர்கள் தங்களுடைய அறைகளில் உள்ள  கணிணியில் நேரடியாகப் பார்க்கும் வசதி உள்ளது. நோயாளிகள் தங்களுடைய  அலைபேசியில் ங-கதிர்ப்படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.

இது தவிர உடலில் ஏற்படும் பல்வேறு  சிக்கல்களுக்கு அறுவை  மருத்துவம் இல்லாமல் பண்டுவம் அளிக்கப் பல கருவிகள் உள்ளன.

அரசு, தனியார் மருத்துவ மனைகளில் இருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே இங்கு multi_speciality_hospital03 மருத்துவம் அளிக்கத் திட்டமிட்டுள்ளனராம். எனவே காய்ச்சல், தலைவலி போன்ற சிறு  நோய்களுக்கு இங்கு வர வேண்டா என மருத்துவமனையினர் தெரிவிக்கின்றனர்.

 மேலும் இந்த மருத்துவமனையில் அனைத்துப் பண்டுவங்களும் முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் என்றும்  உயர்அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இந்த மருத்துவமனை அருகில் விரைவில் மருத்துவக் கல்லூரியும் வர உள்ளது. அதனால் இந்த மருத்துவமனை ஒரு சிறந்த மருத்துவப் பயிற்சி மையமாகவும் ஆராய்ச்சி மையமாகவும் விளங்கும் என்று பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை சிறப்பு அதிகாரி இரமேசு தெரிவித்தார்.

multi_speciality_hospital04   multi_speciality_hospital06