பள்ளி மாணவர்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு
குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் கடந்த 30.11.2013 காரிக்கிழமையன்று பள்ளி குழந்தைகளுக்கான சித்த மருத்துவ ஆய்வு நடந்தது.
சித்த மருத்துவர்கள் –
மரு. மகேந்திரன் (சித்த மருத்துவ முதுவர்)
மரு. தாமோதரன் (சித்த மருத்துவ முதுவர்)
மரு. செயப்பிரதாப் (சித்த மருத்துவ இளவர்)
வந்திருந்து மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு மருந்ததுகளை வழங்கினர்.
குன்றத்தூர் சீபா மருத்துவ ஆய்வகத்தினர் தேவையானவர்களுக்குக் குருதி, சருக்கரை, கொழுப்பு… போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு உதவினர்.
மருத்துவ ஆய்வில் 150 பள்ளிக் குழந்தைகளும் 200க்கும் மேற்பட்ட பொது மக்களும் பங்கேற்றுப் பயன் பெற்றனர்.
சித்த மருத்துவ ஆய்வு மக்களிடையேயும் குழந்தைகளிடமும் சித்த மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வை நன்கு ஏற்படுத்தியது.
Leave a Reply