பார்ட்லி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மொழி விழா
சிங்கப்பூர்: தமிழ் மொழி விழாவையொட்டி பார்ட்லி உயர்நிலைப் பள்ளி “தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்”- நாம் கற்றதும்,பெற்றதும் என்ற நிகழ்ச்சியை சித்திரை 11, 2046 / ஏப்பிரல் 24, 2015 அன்றுநடத்தியது. அந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தேசியக் கல்வி நிலையத்தில் தமிழ் ஆசிரியர்கள் எப்படி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர் என்றும் கணினிகளில் தமிழின் அறிமுகத்தைப் பற்றியும் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளப்பட்டது. மறைந்த திரு நா.கோவிந்தசாமி, இணையத்திற்கு தமிழை அறிமுகப்படுத்தியது நினைவுகூரப்பட்டது.
[மென்பொருட்ளைக் கொண்டு தமிழ் கற்றல், கற்பித்தல் எப்படி என்பதைப் பற்றி மாணவர்கள் உரையாற்றுகின்றனர்.]
பத்து உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் தங்களது ஆய்வுகளை படைத்தனர். அத்துடன், ஜந்து பள்ளிகளின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
[பூன் மே உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் படைத்துள்ள பதிபகிர்வி(Whats app) தமிழ்ப் பாடத்திட்டம்.]
[தகவல் தொழில்நுட்ப ஆய்வுப் படைப்புகளைத் தயாரித்த பள்ளிச் சார்பாளர்கள், தத்தம் பங்கேற்பு விருதுகளுடன். பின் வரிசையில் நிகழ்ச்சிக்கான சிறப்பு விருந்தினர் திரு செயராசதாசு பாண்டியன் ( நடுவில்), திரு கலைமணி, பார்ட்லி தமிழாசிரியர் (உ)லூயிசு ஐசக் குமார் (ஆக இடது), திருவாட்டி துருக்கா (ஆக வலது).]
Leave a Reply