பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் உலக மாந்த உரிமை நாளான திசம்பர் 10 அன்று ‘மழலையர் கற்றல் கொண்டாட்டம்’ சிறப்பாய் நடந்தது.

திரைப்பட நடிகர் தோழர் இராமு அவர்களும் எழுத்தாளர் வழக்குரைஞர் நடராசன் அவர்களும் மழலைச் சொல் பதிப்பகம் தோழர் மலர்விழி அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

மழலையர் தங்களின் கற்றல் திறனை மகிழ்வாய் வெளிப்படுத்தினர். பல்வகைப் படங்களை, கற்றல் துணைக் கருவிகளை, விளையாட்டுப் பொருட்களை அடுக்கி, வகைப்படுத்தி, முறைப்படுத்தி தானாயும் தன் நண்பர்களோடு குழுவாயும் கற்று மகிழ்ந்த காட்சி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டது.

குழந்தைகள் படங்களை வரிசைப்படுத்தியும், எழுத்துகளைக் கொண்டும் கதைகள் கூறி மகிழ்ந்தனர்; சேர்ந்து பாடி ஆடினர்.

மழலையரின் மகிழ்வான கற்றலின் விளைச்சலாய் வெளிப்பட்டது, இந்தக் ‘கற்றல் கொண்டாட்டம்’. மழலை குணேசின் வரவேற்புரையில் தொடங்கி, இறுதியில் கலைஞர் இராமு அவர்கள் குழந்தைகளிடம் கதை பேசி மகிழ விழா நிறைவு பெற்றது, நெஞ்சங்களில் நிறைந்து நின்றது.

 

தொடர்புக்கு :

paventharthamizhpalli@gmail.com