புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் குறித்த

முதல் அனைத்துலக மாநாடு

மொரிசியசு

         (சூலை 16, 17 &18 – 2014)

           

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் குறித்த முதல் அனைத்துலக மாநாடு மொரிசியசு நாட்டிலுள்ள மகாத்மா காந்தி நிறுவன வளாகத்தில் வரும் சூலை 16-18, 2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டினைச் சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனமும் மொரிசியசு நாட்டின் மகாத்மா காந்தி நிறுவனமும், மொரிசியசு நாட்டின் பல்வேறு தமிழமைப்புக்களும் இணைந்து நடத்துகின்றன.

மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இம்மாநாட்டின் கருத்தரங்கில் நாளொன்றிற்கு 30 கட்டுரைகள் வரை அரங்கேற உள்ளன.  65 நாடுகளின் பேராளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

மொரிசியசு நாட்டின் முன்னாள் கல்வியமைச்சரும் உலக வங்கியின் மூத்த  அறிவுரைஞருான பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் மாநாட்டு அமைப்புக்குழுவின் தலைவராக உள்ளார்.

 ஆய்வுக்கட்டுரை வழங்க விழைவோர் ஆய்வுச்சுருக்கத்தினை ஒரு பக்க அளவில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் வழியாக 31-12-2013-க்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். முழுக்கட்டுரையினை 31-04-2014-க்கு முன்னர் மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம்.

 

இம்மாநாடு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளவும் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர் தம் பெயர்களைப் பதிவு செய்யவும் மாநாட்டு வலைத்தளத்தோடு (www.tamil-diaspora.org) தொடர்பு கொள்ளலாம்.

 

 

தொடர்பு முகவரி:

 

முனைவர் சான்சாமுவேல்

இயக்குநர்

ஆசியவியல் நிறுவனம்

செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் அஞ்சல்

சென்னை-600119

தொலைபேசி: 044-24501851

கைப்பேசி: 9840526834

மின்னஞ்சல்: ias@xlweb.com

இணையத்தளம்: http://xlweb.com/heritage/com