புழுதிவாக்கம் அண்ணாமலை தெரு குடியிருப்போர் சங்கம், புழுதிவாக்கம் அரிமா சங்கத்துடன் இணைந்து வரும் புரட்டாசி 5, 2045 / 21.09.14 ஞாயிறு காலை 9.00 மணி முதல் 2.30 மணி வரை இத் தெருவில் இலவச மருத்துவ முகாம் நடத்துவதாகவும் பொதுமக்கள் பங்கேற்றுப் பயன்பெருமாறும் அண்ணாமலை தெரு குடியிருப்போர் சங்கத் தலைவர் திரு இ.நல்ல பெருமாள் என்ற குமரன் தெரிவித்துள்ளார்.

  குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை மருத்துவர் முத்துக்குமார் தலைமையில் மருத்துவர்கள், பொது மருத்துவச் சோதனை, எலும்பு தொடர்பான பரிசோதனை, சருக்கரை நோய் கண்டறிதல், இரத்த அழுத்தம் சோதித்தல், கை, கால், மூட்டு, முதுகு தண்டுவடம் ஆகியவற்றைப் பரிசோதித்தல் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர்.

  அரிமா மாரிமுத்து, அண்ணாமலை தெரு குடியிருப்போர் சங்கத் தலைவர்இ.நல்ல பெருமாள் என்ற குமரன் ஆகிய இருவரும் முகாம் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளைப் பார்த்து வருகின்றனர்.

freemedicalheallthcamp_annamalaitheru-kumaran