68vaazhvurimai01 68vaazhvurimai02

பேரூராட்சி நிருவாகத்தைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்

 திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சியைக்கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வத்தலக்குண்டு பகுதியில் பேரூராட்சி சார்பாக நிலக் கவர்வுகள் நீக்கப்பட்டன. இதில் நிருவாகத் தலையீடு காரணமாக ஒரு சில பகுதிகளில் மட்டும் எடுத்து விட்டு மற்ற பகுதிகளில் எடுக்காமல் விட்டுவிட்டனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் விளைச்சல் நிலங்கள் அனைத்தும் பயன்பாடற்ற நிலையில் உள்ளன.

  இதனைக்கண்டித்து மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் அ.நசீம், மாநிலத் துணைப்பொதுச்செயலாளர் தமிழ்நேசன், மாநிலச் சிறுபான்மைச் செயலாளர் சை.அக்கீம் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

68vaigaianeesu