பொன் சிவகுமாரன் நினைவுக்கிண்ணச் சுற்றுப் போட்டிகள்
தமிழர் பண்பாட்டுக் கழகம், முன்சன்-யேர்மனி
தியாகி பொன் சிவகுமாரன் நினைவுக்கிண்ணச் சுற்றுப் போட்டிகள்
யேர்மன் தேசியக்கொடி, தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன்தொடங்கியது.உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டப் போட்டிகளில் நியூரென்பர்கு, ஆலென், மூன்சென்(Nürenburg, Alen, München) நகரங்களிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டு கடும் போட்டிகளுக்கு மத்தியில்தங்களின் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தினார்கள்.
பார்வையாளர்களின் ஆரவாரமான ஊக்கமும், உற்சாகமும் விளையாட்டு வீரர்களை மேலும்சிறப்பாக ஆடவைத்ததால், அவர்கள் வெற்றி மகிழ்ச்சியில் திளைத்தார்கள். இறுதியில்பரிசளிப்பில் முன்சன்-தமிழாலய நிருவாகி, ஆசிரியைகள், தமிழர் பண்பாட்டுக்கழகத்தவர்கள் வெற்றி வீரர்களுக்கு, பதக்கங்கள், கிண்ணங்களை வழங்கிமதிப்பளிப்பு செய்தார்கள் இவ்வண்ணம் நிகழ்வுகள் இனிதே நிறைவேறிற்று.
பங்குபற்றிய விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் யாவர்க்கும் தமிழர்பண்பாட்டுக் கழகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தரவு : எங்கள் ஈழம் இது தமிழீழம்
Leave a Reply