மதிமுகக் கழக வழக்குரைஞர் மாநாடு 16.11.13 சனிக்கிழமை காலை 10.00 மணிக்குச்  சென்னை, எழும்பூர், வேனல்சு சாலை, இம்ப்பீரியல் வளாகத்தில் உள்ள சிராசு மகாலில் கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்குரைஞர் தேவதாசு தலைமையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின் காலை அமர்வில் பின்குறிப்பிட்டுள்ள தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீர்மானம் எண். 1

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குக!

தீர்மானம் எண். 2

உச்ச நீதிமன்ற அமர்வுகளை இந்தியாவின் பிற பாகங்களிலும் நிறுவிடுக!

தீர்மானம் எண். 3

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு முதலேற்பு அதிகார வரம்பு வழங்கிடுக!

தீர்மானம் எண். 4

சென்னை மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட புதிய பகுதிகளை சென்னை உயர் நீதிமன்ற நில அதிகார வரம்பில் கொண்டு வருக!

தீர்மானம் எண். 5

திருவொற்றியூர், அம்பத்தூர், ஆலந்தூர் நீதிமன்றங்களை அந்தந்த ஊர்களிலேயே செயல்பட வகைசெய்க!

தீர்மானம் எண். 6

சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தை உடனடியாகக் கட்டுக!

தீர்மானம் எண். 7

தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்க!

தீர்மானம் எண். 8

வழக்கறிஞர் நல நிதியைத் தற்போதுள்ள உரூ. 5-1/4 இலட்சத்திலிருந்து உரூ. 10 இலட்சமாக உயர்த்துக!.

தீர்மானம் எண். 9

நீதிபதி வெங்கடாசலய்யா குழுவின் பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு அகவையை 68 ஆகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு அகவையை 65 ஆகவும் உயர்த்திடுக!

தீர்மானம் எண். 10

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் குறுக்கிடும் தேசிய நீதித்துறை நியமன ஆணையச் சட்டத்தைத் திரும்பப் பெறுக!

தீர்மானம் எண். 11

இந்தியாவின் தேர்தல் முறையில் மாற்றம் கொணர்க!

தீர்மானம் எண். 12

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குக!

தீர்மானம் எண். 13

தனித் தமிழ் ஈழம் அமைய வேண்டும்!

தீர்மானம் எண். 14

தனித் தமிழ்ஈழம் அமைய உலக அளவில் பொது வாக்கெடுப்பு தேவை

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.