ஆனி 8, 2045 / சூன் 22, 2014 ஞாயிறு காலை9 மணி முதல் மாலை 3 மணிவரை இருசக்கர ஊர்திகள் மற்றும்தானிகளுக்கு கட்டணமின்றி தமிழ் எண் பலகை அமைத்துத்தரும் நிகழ்வுபொங்குதமிழ் சங்கம் மற்றும் சினேகிதன் மிளிரொட்டி(ஸ்டிக்கெர்ஸ்) நிறுவனத்தால்நடத்தப்பட்டது.

ஏறத்தாழ 3700 துண்டறிக்கைகள், தினத்தந்தி, தினமணிநாளிதழ்கள் ஊடாக கொண்டுசேர்த்தும், தானிகளில் சிறுபதாகை விளம்பரம் செய்தும் 81 தமிழர்கள் மட்டுமே தங்கள் ஊர்திகளுக்கு, தமிழ் பலகையைஅமைத்துக்கொண்டனர்.

மன்னார்குடி போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர்தமிழ்த்திரு இரா.சரவணன் அவர்கள் தன் கையாலேயே ஊர்தி எண்ணை ஒட்டி நிகழ்வைத்தொடக்கிவைத்தார். தாய்த்தமிழின் இன்றைய அவல நிலையை மிகுந்த மனவருத்தத்தோடு குறிப்பிட்டதோடு, அந் நிலையைமாற்றி எங்கும் தமிழ், எதிலும்தமிழ் என்று ஆக்கிட நாம் அரும்பணியாற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து ஒரு சிற்றுரையாற்றினார். அன்னாரின் தமிழ்ப் பற்றினை ‘பொங்கு தமிழ் சங்கம்’ தலைதாழ்த்தி, கரம் கூப்பி வணங்குகிறது.

1.அரசு தமிழ் எண்களை, பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்.

2.ஊர்திகளில் தமிழ் எண் பலகை அமைக்கலாம் என்பதற்கான அரசாணையை அரசு கண்டிப்புடன் செயல்படுத்தவேண்டும்.

3.தமிழ் எண்பலகை உடைய ஊர்தி ஓட்டுபவர்கள், அரசாணையின் படியை, எப்போதும் ஊர்தியில் வைத்திருக்கவேண்டும்.

4.போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கும், காவல் அலுவலர்களும், அரசாணையின் படியை வைத்திருக்கவேண்டும்.

5.தமிழர்கள் தமிழ் பற்றி தாங்கள் கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையையும், தீவிர தன்னலப்போக்கையும் விட்டொழித்து, மொழி , இனஉணர்வுபெறவேண்டும்.இதற்கு தன்னார்வலர்கள் தளர்ச்சியுறாமல் தொடர்ந்துபணியாற்றவேண்டும்.

(படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)