செம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil என்னும் 

முனைவர் மறைமலை  இலக்குவனார்

நூல்கள் அறிமுக விழா

சென்னை கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில்  ‘செவ்வாய்தோறும்  செந்தமிழ்’ என்னும் ்தலைப்பில் இவ்வாண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம் மார்கழி 18,2048 செவ்வாய் சனவரி 02,2018 அன்று  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரின்

செம்மொழிச்சுடர்,

In Defense of Classical Tamil

ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது.

சிவலாயம் செ.மோகன் தலைமையில் நீதிபதி இரா.சுரேசுகுமார், தேர்ந்த இலக்கியவாதி போல் சிறப்பாக அறிமுக உரை யாற்றினார். இந்நூற்களுடன் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்(சங்கக்காலம்) நூல் குறித்து ஒப்பிட்டு அனைவரின் உள்ளங்கவரும் வகையில் பொழிவாற்றினார்.

முன்னதாகப் பேராசிரியர் கண.சிற்சபேசன், பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்ப்பணி, மறைமலை இலக்குவனாரின் நூற்பணிகள் குறித்துத் தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் உரையாற்றினார்.

நூலாசிரியர் பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் ஏற்புரை வழங்கினார்.

தொடக்கதத்தில்  பட்டிமன்றச் செயலர் பக்தவத்சலம் வரவேற்புரையாற்றினார்.

[படங்களைச் சொடுக்கினால் பெரிதாகக் காணலாம்.]

String could not be parsed as XML