மாணிக்கவாசகம்பள்ளி, அறநெறிப்பாடல், பரிசு -nighazh_manikkavasakarpalli_araneri01

  அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை பெருந்தலைவைர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்குப் பாராட்டு விழா

  தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாகப் போட்டி போட்டு அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்குப் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

  காரைக்குடி   தமிழ்ச் சங்கம் சார்பாக நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் பள்ளிப் பரிசு போட்டிகளில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகியவற்றை மனனம் செய்து கருத்துடன் தெரிவித்து இப்பள்ளி மாணவ மாணவியர்   11 பேர் வெற்றி பெற்றுப் பரிசு பெற்றனர். 2 ஆம் வகுப்பில் மாணவர் வெங்கட்ராமன், 3 ஆம் வகுப்பில் மாணவிகள்   சனசிரீ, கீர்த்தியா, 4 ஆம் வகுப்பில் மாணவர்கள் ஐயப்பன், அசய் பிரகாசு, 5 ஆம் வகுப்பில் மாணவர் கார்த்திகேயன், மாணவி மாதரசி, 6 ஆம் வகுப்பில் மாணவர்கள் இரஞ்சித்து, விக்னேசு, 7 ஆம் வகுப்பில் மாணவர் நந்த குமார், மாணவி தனலெட்சுமி ஆகியோர் பரிசுகள் பெற்றனர்.

பரிசு பெற்றவர்களை ஆசிரியர் அனைவரும் பாராட்டினார்கள்.

ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

பள்ளி விடுமுறை நாளன்று மாணவர்களை ஆசிரியர்கள் காரைக்குடிக்கு அழைத்துச் சென்று போட்டிகளில் பங்கேற்கச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலெ.சொக்கலிங்கம்

jeyamchok@gmail.com 
http://www.kalviyeselvam.blogspot.in/