முனைவர் பட்டம் பெற்ற 80 அகவை இளைஞர் சித்தர் அ.பாண்டியன்
18.02.2014 அன்று நடைபெற்ற அழகப்பா கல்லூரியின் 26 ஆவது பட்டமளிப்பு விழாவில் வேந்தர் ஆளுநர் உரோசையா அவர்கள் தலைமையில் நீதியரசர் இராமசுப்பிரமணியன் பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். நேர்த்தியான அரங்கில் 157 முனைவர் பட்டதாரிகளும், 112 முதன்மை விருது பெற்ற பல்வேறு புலங்களைச் சேர்ந்த பட்டதாரிகளும் நேரில் பட்டம் பெற்றனர். இளைஞர் பட்டாளத்தையும் அவர்களுடைய பெற்றோரின் பெருமைமிகு பாச முகங்களையும் கண்டது மகிழ்ச்சிக்குரியது. முனைவர் பட்டம் பெற்றவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஒளிவீசும் கண்களும், அன்பு ததும்பும் சொற்களும்கொண்ட 80 அகவை இளைஞர் முனைவர் சித்தர் அ.பாண்டியன்.
பட்டமளிப்பு விழாவிற்குச் சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி முதல்வர் முனைவர் திரு சந்திரமோகன், அவர் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம், பிற பட்டங்கள் பெற்றவர்களுடன் வந்திருந்தனர்.
முனைவர் பெரியவர் அ.பாண்டியன், அவருடைய வழிகாட்டி திருமிகு வேணி, முனைவர் காளைராசன், சொ.வினைதீர்த்தான்
தரவு : சொ.வினைதீர்த்தான்
Leave a Reply